தக்கயாகப்பரணி உரை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தக்கயாகப்பரணி உரை 16-ஆம் நூற்றாண்டில் தோன்றிய உரைநூல்.[1] 12-ஆம் நூற்றாண்டில் தோன்றிய தக்கயாகப் பரணி என்னும் நூலுக்கு எழுதப்பட்ட உரை இந்த நூல். இந்த உரைநூலின் ஆசிரியர் இன்னார் எனத் தெரியவில்லை.[2]

உரைக் குறிப்புகள்

  • ஒட்டக்கூத்தர் பாடிய தக்கயாகப்பரணியில் 814 தாழிசைகள் உள்ளன. அவற்றுள் இந்த நூல் 516 தாழிசைகளுக்கு மட்டும் உரை கூறுகிறது. ஏனையவற்றைக் ‘கவிச்சக்கரவர்த்தியின் வாக்கு அல்ல’ எனக் குறிப்பிடுகிறது. இவை பிற்காலத்தவரின் இடைச்செருகல்கள்.
  • ”வளையாபதியை நினைத்தார், கவியழகு வேண்டி”- இப்படி ஒரு குறிப்பு உரையில் வருகிறது.
  • ”கனவே பாலவும் நனவே போலவும்” எனத் தொடங்கும் 21 அடி கொண்ட பாடல் ஒன்று ‘தகடூர் யாத்திரை’ப் பாடல் என்னும் குறிப்புடன் இந்த உரையில் மேற்கோள் பாடலாகத் தரப்பட்டுள்ளது.
  • வடநூல் செய்திகள் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.
  • இந்த உரையில் 15 சமயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
  • ஒட்டக்கூத்தர் இராசராசனது பாட்டனாராகிய விக்கிரம சோழன் மீது மற்றொரு பரணி பாடியிருக்கிறார் என்பதை இந்த உரை குறிப்பிடுகிறது.
  • இந்த உரைநூல் உ. வே. சாமிநாதையர் பதிப்பாக இருமுறை வெளிவந்துள்ளது.

இந்த உரையைச் சாமிநாதையர் பாராட்டியுள்ள பாடல்:

பாரும் விசும்பும் புகழ் தக்கயாகப் பரணியின் பால்
ஆரும் சுவை பல ஆரும் தெளிய அணி உரை செய்
சீரும் சிறப்பும் உடையோய் இருமொழிச் செல்வ நின்றன்
பேரும் தெரிந்திலன் என் செய்குவேன் இந்தப் பேதையனே.[3]

கருவிநூல்

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. வைரமேக விருத்தி என்னும் நூலை இந்த உரை குறிப்பிடுகிறது. இது நேமிநாத உரை (நேமிநாத விருத்தி) எனத் தெரியவருகிறது. இந்த உரைநூலின் காலம் 16 ஆம் நூற்றாண்டு. எனவே தக்கயாகப் பரணி உரையும் 16 ஆம் நூற்றாண்டு.
  2. எனினும் உரையில் வரும் வைரமேக விருத்தி என்னும் தொடரைக்கொண்டு இவரது பெயர் வைரமேகர் எனக் கொள்ளப்படுகிறது.
  3. கட்டளைக் கலித்துறைப் பாடல் பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது.
"https://tamilar.wiki/index.php?title=தக்கயாகப்பரணி_உரை&oldid=15691" இருந்து மீள்விக்கப்பட்டது