டேனியல் பாலாஜி
Jump to navigation
Jump to search
டேனியல் பாலாஜி | |
---|---|
பிறப்பு | டி. சி. பாலாஜி 2 திசம்பர் 1975 சென்னை, தமிழ் நாடு, இந்தியா |
இறப்பு | 29 மார்ச்சு 2024 கொட்டிவாக்கம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 48)
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2003–2024 |
உறவினர்கள் | சித்தலிங்கையா (மாமா) முரளி அதர்வா (மருமகன்) |
வலைத்தளம் | |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
டேனியல் பாலாஜி (Daniel Balaji) எனப்படும் டி. சி. பாலாஜி (2 திசம்பர் 1975 – 29 மார்ச் 2024), இவரது மேடைப் பெயரான டேனியல் பாலாஜி என்பதன் மூலம் நன்கு அறியப்பட்ட ஒரு தென்னிந்திய நடிகர் ஆவார். இவர் முக்கியமாகத் தமிழ், மலையாளத் திரைப்படங்களில் பணியாற்றினார்.
இளமை
பாலாஜி தெலுங்குத் தந்தைக்கும் தமிழ்த் தாய்க்கும் மகனாக சென்னையில் பிறந்தார்.[1] சென்னை தரமணியில் உள்ள திரைப்பட நிறுவனத்தில் திரைப்படத் தயாரிப்பு படிப்பினைப் படித்தார். இவரது மாமா கன்னடத் திரைப்பட இயக்குநர் சித்தலிங்கய்யா; தமிழ் நடிகர் முரளியின் தந்தை.[2] இவரது மருமகன் அதர்வா, பாணா காத்தாடி படத்தில் அறிமுகமானவர்.
இறப்பு
டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக தனது 48 வயதில் காலமானார்.[3]
திரை வரலாறு
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்பு |
2003 | ஏப்ரல் மாதத்தில் | தமிழ் | ||
காதல் கொண்டேன் | காவல் அதிகாரி | தமிழ் | ||
காக்க காக்க | சிறீகாந்த் | தமிழ் | ||
2004 | பிளாக் | ஏழுமலை | மலையாளம் | |
2005 | கணேசா | சிறீகாந்த் | தெலுங்கு | |
2006 | நவம்பர் ரைன் | மட்டன்சேரி தாதா | மலையாளம் | |
வேட்டையாடு விளையாடு | அமுதன் சுகுமாரன் | தமிழ் | ||
2007 | பொல்லாதவன் | ரவி | தமிழ் | |
சிறுத்தை | பீக்கு | தெலுங்கு | ||
2009 | முத்திரை | அழகு | தமிழ் | |
பகவான் | சைபுதீன் | மலையாளம் | ||
டாடி கூல் | சிவா | மலையாளம் | ||
2011 | கிராதகா | சீனா | கன்னடம் | |
மிதிவெடி | அசோகா | தமிழ் | ||
கிரைம் ஸ்டோரி | மலையாளம் | |||
2012 | 12 ஹவர்ஸ் | ஆண்டனி ராஜ் | மலாய் | |
மறுமுகம் | மாயழகன் | தமிழ் | ||
2013 | பைசா பைசா | மலையாளம் | ||
2014 | ஞான கிறுக்கன் | தமிழ் | ||
டவ் | கன்னடம் | |||
சிவாஜிநகரா | கன்னடம் | |||
வை ரா வை | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "Villain Daniel Balaji First Telugu Interview | Actor Daniel Balaji about Actor Murali and Atharvaa". https://www.youtube.com/watch?v=kauJLtAVez4&t=256s.
- ↑ "Daniel Balaji to essay the character of a Don!". 2013-09-10 இம் மூலத்தில் இருந்து 2013-09-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130913104532/http://www.sify.com/movies/daniel-balaji-to-essay-the-character-of-a-don-news-kannada-njknwHjabia.html.
- ↑ "Tamil actor Daniel Balaji passes away due to heart attack" (in en). The New Indian Express. 29 March 2024. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2024/Mar/29/tamil-actor-daniel-balaji-passes-away-due-to-heart-attack.