டி. டி. சக்கரவர்த்தி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

டி. டி. சக்கரவர்த்தி தமிழ்நாட்டிலேயே கண்பார்வையற்ற முதலாவது நீதிபதி ஆவார். வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள திமிரி என்ற ஊரைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவர் தனது நான்காவது அகவையில் அம்மை நோய் காரணமாக தனது கண்பார்வையை இழந்தார். வழக்குரைஞர் பட்டம் பெற்ற இவர் துவக்கத்தில் மாவட்ட நீதிமன்றத்தில் (அறமன்றத்தில்) வழக்குரைஞராக பயிற்சி பெற்றார்.

பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் பயிற்சி பெற்றார். தமிழக அரசின் மாவட்ட நீதிபதிப் (அறநடுவர்) பயிற்சிக்கு தேர்வு பெற்றார். 2008-ல் நடந்த தமிழக அரசின் தேர்வாணைய நீதிபதிகள் தேர்வுக்கான தேர்வில் 13-வது இடம் பெற்றார். தமிழ்நாடு மாவட்ட ஜூடிசியல் அகாடமியில் 2 மாதங்கள் பயிற்சி பெற்றார். வால்பாறை நீதிமன்றத்திலும் பயிற்சி நீதிபதியாக இருந்தார்.

ஜூன் 2009 இல் கோவை மாவட்ட 3-வது கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் சக்கரவர்த்தி நீதிபதியாக (அறநடுவராக) நியமிக்கப்பட்டார்.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=டி._டி._சக்கரவர்த்தி&oldid=28011" இருந்து மீள்விக்கப்பட்டது