டி. எம். பீர் முகம்மது

டி. எம். பீர் முகம்மது இலங்கையின் மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர், மேடைப் பேச்சாளர்.[1] மலையகத்தில் இருந்து வெளியிடப்பட்ட நவஜீவன், நண்பன் ஆகிய வார இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.[1] பல சிறுகதைகள், புதினங்களை எழுதியுள்ளார்.[2]

பீர் முகம்மது தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர். பெரியாரின் திராவிட, சுயமரியாதைப் போராட்டங்களில் பங்குபற்றியவர். 1940களின் இறுதியில் இலங்கைக்கு இடம்பெயர்ந்து, கொழும்பில் புதுக்கடையில் தங்கியிருந்தார். தொழிற்சங்கவாதி ஜி. எஸ். நாயரின் தொடர்பில், மலையகத் தொழிற்சங்க மேடைகளில் உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது.[1] இவருடைய திராவிட முன்னேற்றக் கழக சார்பு மேடைப் பேச்சுக்களினால், இவர் ‘ஈழத்து அண்ணா’ என்று அழைக்கப்பட்டார்.[2]

வெளிவந்த நூல்கள்

  • சிறுகதைகள் 6"
  • சதியில் சிக்கிய சலீமா (புதினம்)
  • கங்காணி மகள் (புதினம், 1955)[2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=டி._எம்._பீர்_முகம்மது&oldid=15512" இருந்து மீள்விக்கப்பட்டது