ஜே. கே. ரித்தீஷ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜே. கே. ரித்தீஷ்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2009 - 2014
முன்னையவர்பவானி ராசேந்திரன்
பின்னவர்அன்வர்ராஜா
தொகுதிஇராமநாதபுரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
முகவை குமார்

(1973-03-05)5 மார்ச்சு 1973
கண்டி, இலங்கை
இறப்பு13 ஏப்ரல் 2019(2019-04-13) (அகவை 46)
இராமநாதபுரம், இந்தியா
துணைவர்(s)ஜோதீஸ்வரி
(2006 - 2019)
பிள்ளைகள்ஆரிக் ரோசன் (மகன்)
பெற்றோர்(s)ஸ்ரீ. குழந்தைவேலு
ஜெயலட்சுமி
வேலைநடிகர், அரசியல்வாதி

ஜே. கே. ரித்தீஷ் (5 மார்ச் 1973 – 13 ஏப்ரல் 2019) ஓர் இந்திய நடிகரும், அரசியல்வாதியும் ஆவார்.[1] இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், இராமநாதபுரம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரான வி. சத்தியமூர்த்தியை 69,915 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.[2] பின்னர் ஏப்ரல் 10, 2014 அன்று முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

வாழ்க்கை வரலாறு

இவர் 05 மார்ச் 1973 ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தார். பின்னர் 1976 ஆம் ஆண்டு இவரது குடும்பம் இராமேஸ்வரத்திற்கு குடிபெயர்ந்து. இவரது தந்தை விவசாயியும் மற்றும் தாயார் இல்லத்தரசியும் ஆவார். இவருக்கு சாந்தி மற்றும் மணி என இரண்டு தங்கைகள் உள்ளனர். இவர் 2006 ஆம் ஆண்டு ஜோதீஸ்வரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரிக் ரோசன் என்னும் மகன் உள்ளார். இவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முகமது சதாக் என்னும் தொழில்நுட்பக் கல்லூரியில் படிப்பை முடித்தார். பின்னர் காரைக்குடியில் உள்ள அழகப்பா பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.

2011ஆம் ஆண்டில், அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவருக்கு நிலம் வாங்கித் தருவதாகக்கூறி ஏமாற்றியதாக, இவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.[3]

திரை வாழ்க்கை

இவர் சின்னி ஜெயந்த் இயக்கிய கானல் நீர் திரைப்படத்தில் முதல் முதலில் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்பு 2008 ஆம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படத்தில் நடித்தார். பின்பு பெண் சிங்கம், எல். கே. ஜி ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

நடித்த திரைப்படங்கள்

வருடம் திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2007 கானல் நீர் ராஜவேல்
2008 நாயகன் குரு
2010 பெண் சிங்கம்
2019 எல். கே. ஜி ராம்ராஜ் பாண்டியன்

இறப்பு

இவர் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், ஏப்ரல் 13, 2019 அன்று மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழந்தார்.[4]

மேற்கோள்கள்

  1. "நடிகரும் முன்னாள் எம்.பி-யுமான ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் மரணம்!". விகடன் (ஏப்ரல் 13, 2019)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-03-06. பார்க்கப்பட்ட நாள் 2019-04-13.
  3. "நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.கே. ரித்தீஷ் மாரடைப்பால் மரணம்". பி.பி.சி தமிழ் (ஏப்ரல் 13, 2019)
  4. "நடிகர் ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார்". புதிய தலைமுறை (ஏப்ரல் 13, 2019)
"https://tamilar.wiki/index.php?title=ஜே._கே._ரித்தீஷ்&oldid=22220" இருந்து மீள்விக்கப்பட்டது