ஜெயில் (2021 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜெயில்
இயக்கம்வசந்தபாலன்
தயாரிப்புசிறீதரன் மரியதாசன்
கதைஎஸ். ராமகிருஷ்ணன்
பாக்கியம் சங்கர்
பொன் பார்த்திபன்
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்புஜி. வி. பிரகாஷ் குமார்
அபர்னதி
ராதிகா சரத்குமார்
ஒளிப்பதிவுகணேஷ் சந்திரா
படத்தொகுப்புரேமண்ட் டெரிக் கிரஸ்டா
கலையகம்கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ்
விநியோகம்ஸ்டுடியோ கிரீன்
வெளியீடு9 திசம்பர் 2021 (2021-12-09)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஜெயில் (Jail) என்பது 2021இல் தமிழ் மொழியில் வெளியான குற்றவியல் திரைப்படம் ஆகும். இதை வசந்தபாலன் எழுதி இயக்கியிருந்தார். இப்படத்தை கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார், அபர்னதி, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ரேமண்ட் டெரிக் கிரஸ்டா படத் தொகுப்பை மேற்கொண்டுள்ளார். படம் 9 திசம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டது. இப்படம் விமர்சகர்களிடமிருந்தும், பார்வையாளர்களிடமிருந்தும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

நடிகர்கள்

தயாரிப்பு

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி. வி. பிரகாஷ் குமார் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.[1] பிரகாஷ் தனது இசை வாழ்க்கையை வசந்தபாலனின் வெயில் (2006) திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகத் தொடங்கினார். எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற உண்மைநிலை நிகழ்ச்சித் தொடரின் மூலம் புகழ் பெற்ற அபர்னதி இந்த படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் அறிமுகமானார். [2]

ஒலிப்பதிவு

ஜி. வி. பிரகாஷ் குமார் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்காக அதிதி ராவ் ஹைதாரி, தனுஷ் ஆகியோர் ஒரு பாடலைப் பாடியுள்ளனர்.[3]

மேற்கோள்கள்

  1. "Jail first look: GV Prakash Kumar is seen as a purposeful man in this Vasanthabalan directorial-Entertainment News, Firstpost". 3 August 2018.
  2. "GV Prakash Kumar - Vasanthabalan film titled 'Jail'!". Archived from the original on 2018-08-03. பார்க்கப்பட்ட நாள் 2021-12-31.
  3. "Aditi Rao Hydari croons for GV Prakash". 7 December 2018.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஜெயில்_(2021_திரைப்படம்)&oldid=38042" இருந்து மீள்விக்கப்பட்டது