ஜானி (2018 திரைப்படம்)
ஜானி | |
---|---|
இயக்கம் | ப.வெற்றிச்செல்வன் |
தயாரிப்பு | தியாகராஜன் |
கதை | தியாகராஜன் |
இசை | ரஞ்சன் துரைராஜ் |
நடிப்பு | பிரசாந்த் பிரபு சஞ்சிதா செட்டி ஆத்மா |
ஒளிப்பதிவு | எம். வி. பன்னீர்செல்வம் |
படத்தொகுப்பு | சிவ சரவணன் |
கலையகம் | ஸ்டார் மூவிஸ் |
வெளியீடு | 14 டிசம்பர் 2018 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | 10 கோடி |
ஜானி (Johnny) என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை தியாகராஜன் எழுதி, இயக்கி, பா.வெற்றிச்செல்வனால்தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் பிரசாந்த், பிரபு, சஞ்சிதா செட்டி, ஆனந்த் ராஜ் மற்றும் ஆத்மா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரஞ்சன் துரைராஜ் இசையமைப்பு மற்றும் எம். வி. பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு ஆகியவற்றை உள்ளடக்கி, இத்திரைப்படம் டிசம்பர் 14, 2018 அன்று வெளியானது. இத்திரைப்படமானது 2007 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ஜானி கட்டார் என்னும் படத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.[1][2]
நடிகர்கள்
- பிரசாந்த் - ஜானி / சக்தி
- சஞ்சிதா செட்டி - ரம்யா
- பிரபு - ஜெய்சங்கர்
- ஆனந்த் ராஜ் - பிரகாஷ்
- ஆசுதோஷ் ராணா - ராம்
- சாயாஜி சிண்டே - கல்யாண்
- ஆத்மா பேட்ரிக் - சிவா
- கலைராணி
- தேவதர்சினி
- சுகுந்தன்
- ஜெயக்குமார்
- கிருஷ்ணமோகன்
- சந்தியா
கதைச் சுருக்கம்
ஜானி (பிரசாந்த்), ஜெய்சங்கர் (பிரபு), பிரகாஷ் (ஆனந்த்ராஜ்), ராம் (அசுதோஷ் ராணா), மற்றும் சிவா (ஆத்மா பேட்ரிக்) உள்ளிட்ட ஐந்து பேரும் சேர்ந்து ஒரு குழுவாக செயல்பட்டு, சட்டவிரோத தொழில்களில் ஈடுபட்டு, குறுக்கு வழியில் சம்பாதித்து ஒரு சூதாட்ட கிளப்பை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 2(1/2) கோடி ரூபாய் பணம் தயார் செய்தால் கையில் விலை உயர்ந்த போதைப்பொருள் கிடைக்கும் என்று ஜெய்சங்கரின் நண்பரான கல்யாண் (சாயாஜி சிண்டே) கூறுகிறார். இதற்காக ஐவரும் இணைந்து ஆளுக்கு ரூ.50 லட்சம் ஏற்பாடு செய்கிறார்கள். இப்பணத்தை எடுத்துச் செல்லும் பொறுப்பு சிவாவிடம் கொடுக்கப்படுகிறது. அப்போது ஜானிக்கு அந்த 2(1/2) கோடி பணத்தை இவர்களிடம் இருந்து கொள்ளையடித்து, தன் காதலியான ரம்யாவுடன் (சஞ்சிதா செட்டி) சேர்ந்து வெளிநாட்டுக்கு சென்று வாழலாம் என மனதில் நினைக்கிறார். அவர் நினைத்தது போல் இப்பணத்தை கொள்ளையடித்தாரா? அவருடைய காதலியுடன் சேர்ந்து வெளிநாட்டிற்கு சென்றாரா?? என்பதே இத்திரைப்படத்தின் கதையாகும்.
மேற்கோள்கள்
- ↑ "ஜானி திரைவிமர்சனம்".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "ஜானி". தினமலர் (டிசம்பர் 14, 2018)