ஜனனகருவி மாலை
Jump to navigation
Jump to search
ஜனனகருவி மாலை [1] என்னும் நூல் இப்போது இல்லை. எனினும் இதன் பாடல்கள் இரண்டு உரையூல் ஒன்றில் மேற்கோளாகத் தரப்பட்டுள்ளன. [2] நம் உடலை இந்த நூல் 'ஜனனகருவி' எனக் குறிப்பிடுகிறது. உடலுக்கு ஐம்பூத விகாரத்தால் வரும் அவத்தைகள் இதில் கூறப்பட்டுள்ளன.
பாடல்
உரைநூலில் கிடைத்துள்ள இரண்டு பாடல்களும் பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டு இங்குத் தரப்பட்டுள்ளன.
1
அன்னை நுகர்ந்ததன் சாரம் பொழுது மூன்றில்
- ஆம் கருவின் இரதம் அதன் மலம் நீர் கிட்டம்
பின் இரதத்து உற்ற மலம் மயிரும் தோலும்
- பேசு திறத்து இறைச்சி இதன் மலங்களாம் தசையில்
துன்னி இடும் மேதை மலப் பித்தம் மேதையினில்
- சூழ் என்பு மலம் நகம் ஆம் என்பின் மச்சை [3]
மன்னும் மலம் பீளை சுக்கிலத்தை மச்சை
- மல நெய்ப்புச் சுக்கிலந்தான் வலி பலம் வாதமுமே
2
நிலம் முதல் ஐந்தும் உடலில் பப்பத்தாக
- நிகழ் சூறு வயசு அளவும் அவத்தைகள் பத்து ஆக்கும்
குலவு இளமை வளர்ச்சி எழில் மேதை வலி ஐந்தும்
- வளர்த்திடும் முன்னர் ஐம்பான் ஆண்டு அளவில்
நலிய வரும் பின்னை ஐம்பான் யாண்டு அளவில் தாது
- நண்ணிய கண் செவி மணம் மூன்றும் போம்படியாத்
கலை உணர்ந்தோர் இஃது அறிந்து ஞான யோகம்
- கற்க வரும் காலத்தே கற்று அடைவர் கதியே.
- "மற்றுக் கூறியன எல்லாம் சனன கருவி மாலையுள் விரித்துக் கூறியன கண்டுகொள்க. ஈண்டு எழுதிற் பெருகும் எனக் காட்டிற்றிலம்" - இவ்வாறு உரையில் கூறப்பட்டுள்ளது.
அடிக்குறிப்பு
- ↑ மு. அருணாசலம். தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014, முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005. p. 286.
- ↑ வெள்ளியம்பலத் தமிரான் 'ஞானாவரனம்' என்னும் நூலுக்கு எழுதிய உரை
- ↑ எலும்பும் தசையும் தேயாமல் உரச உதவும் பசை