சோ. பரஞ்சோதி
Jump to navigation
Jump to search
சோ. பரஞ்சோதி (பிறப்பு சனவரி 16 1942) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளரும், இயக்குநருமான இவர் தமிழ் இளைஞர் மணிமன்றத்தை ஆரம்பகாலங்களில் வளர்த்தவர்களில் ஒருவரும், புகழ் பெற்ற வானொலி தொலைக்காட்சி நடிகரும், இந்து சங்கத் தொண்டில் ஈடுபாடு கொண்டவரும், மலேசிய இந்து சங்கத்தின் தேசியச் செயலாளருமாவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1961 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதைகள், வானொலி, தொலைக் காட்சி நாடகங்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
பரிசுகளும் விருதுகளும்
- தங்கப் பதக்கம் - மலேசியப் பாவலர் மன்றம்
- மலேசிய-இந்திய கலைஞர் சங்கமான GAMA மலேசியாவின் சிறந்த இந்தியக் கலைஞராக இவரைத் தேர்ந்தெடுத்து விருது அளித்துள்ளது (1987)
- "இந்து ரத்தினா" விருது - இந்திய அரசாங்கம் இவரது கலை, கலாசார, சமூக சேவைகளுக்காக வழங்கியுள்ளது (2003)