சோ. தம்பிராஜா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எஸ். தம்பிராஜா
S. Thambirajah
இலங்கை நாடாளுமன்றம்
for பட்டிருப்பு
பதவியில்
1970–1977
முன்னையவர்சி. மூ. இராசமாணிக்கம்
பின்னவர்பூ. கணேசலிங்கம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1917-11-10)10 நவம்பர் 1917
அரசியல் கட்சிஇலங்கை சுதந்திரக் கட்சி
இனம்இலங்கைத் தமிழர்

சோமசுந்தரம் தம்பிராஜா (Somasuntheram Thambirajah, நவம்பர் 10, 1917 - ) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்

தம்பிராஜா 1917 நவம்பர் 10 இல் பிறந்தவர்.[1] இவர் பட்டிருப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எதிர்மன்னசிங்கத்தின் உடன்பிறந்தவர் ஆவார்.

தம்பிராசா ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் 1970 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு நீண்ட காலம் அத்தொகுதியின் உறுப்பினராக இருந்த சி. மூ. இராசமாணிக்கத்தை வென்று நாடாளுமன்றம் சென்றார்.[2] பின்னர் 1977 தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சியின் போட்டியிட்டு மூன்றாவதாக வந்து தோற்றார்.[3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சோ._தம்பிராஜா&oldid=24419" இருந்து மீள்விக்கப்பட்டது