சொக்கநாதக் கலித்துறை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சொக்கநாதக் கலித்துறை என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குருஞான சம்பந்தரால் இயற்றப்பட்டது. இந்த நூலில் 11 கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் உள்ளன. மதுரைச் சொக்கநாதர் கோயிலில் எழுந்தருளியுள்ள சொக்கநாதரைத் தனக்கு வேண்டியன தரும்படி இந்தப் பாடல்களில் புலவர் வேண்டுகிறார்.

பாடல் (எடுத்துக்காட்டு [1])

கல்லது நெஞ்சம், இரும்பை இருசெவி, கண்கள் மரம்
சொல்லுவதும் பொய், அவமே தொழில், துக்க சாகரமாம்
அல்ல என் பங்கு, நின் அன்பர் பங்கு ஆனந்தம்மாக வைத்தாய்
நல்லது, நல்ல மதுராபுரிச் சொக்க நாயகனே

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது
"https://tamilar.wiki/index.php?title=சொக்கநாதக்_கலித்துறை&oldid=14364" இருந்து மீள்விக்கப்பட்டது