சைவ சந்நியாச பத்ததி

சைவ சந்நியாச பத்ததி என்னும் பத்ததி வழிபாட்டு முறை நூல் சிவாக்கிர யோகிகள் என்னும் சிவக்கொழுந்து சிவாசாரியார் இயற்றிய வடமொழி நூல். 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் வேளாளர் குடியில் பிறந்தவர்.

இளமை முதல் சந்நியாசம் மேற்கொள்ளும் நெறி சைவர்களுக்கு இல்லை என, பார்ப்பன சுமார்த்த சந்நியாசிகள் கூறிவந்தனர். அரசன் முன்னிலையில் சிவாக்கிர யோகிகள் வாதிட்டு சைவர்களும் இளமை முதலே சந்நியாசம் மேற்கொள்ளலாம் என்றும், சைவர்களுக்கும் ஆசாரியர் தகுதி உண்டு என்றும் ஆகம மேற்கோள்களைக் காட்டி நிறுவினார். அரசன் இவரது வாதங்களை நூலாகச் செய்துதருமாறு வேண்டினான். அதன்படி எழுதப்பட்டதே இந்த நூல்.

  1. சரியை முறைகள்
  2. சிவபூசை விதிகள்
  3. தகரவித்தை யோகம், பஞ்சாட்சரம்
  4. சந்நியாசி பிச்சை ஏற்றல்
  5. சாதுக்களின் விரத முறை
  6. தீட்சைகள்
  7. சடை முதலான அபிசேக விதிகள்
  8. முத்திக்கு உரிய கிரியைகள்

என இந்த நூலில் 8 படலங்கள் உள்ளன.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005
"https://tamilar.wiki/index.php?title=சைவ_சந்நியாச_பத்ததி&oldid=17283" இருந்து மீள்விக்கப்பட்டது