சைவசமயநெறி
Jump to navigation
Jump to search
சைவசமயநெறி என்னும் நூல் [1] 16 நூற்றாண்டில் வாழ்ந்த தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான சம்பந்தர் என்பவரால் எழுதப்பட்டது. [2]
இது 727 குறள் வெண்பாவால் ஆன சைவ சமயச் சாத்திரப் பெருநூல்.
- முதல் பகுதியில் ஆசாரியர் இலக்கணம் 117 குறட்பாக்களில் சொல்லப்படுகிறது. நல்ல நதிக்கரையில் பிறத்தல், மனக்குற்றம் நீக்குதல், உடற்குற்றம் இன்மை, தீட்சை பெற்றிருத்தல், வேதம் உணர்ந்திருத்தல் முதலானவை ஆசாரியரது இலக்கணங்களாகக் கூறப்பட்டுள்ளன.
- இரண்டாம் பகுதியில் மாணாக்கர் இலக்கணம் கூறப்படுகிறது. இதில் மாணாக்கர்கள் சமயி, புத்திரகன், சாதகன் என மூன்று வகையினராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். பூப் பறித்தல், வில்வம் எடுத்தல், குருவை வழிபடும் முறை முதலானவை இப்பகுதியில் கூறப்பட்டுள்ளன.
- மூன்றாம் பகுதி பொதுவியல். இதில் ஆசாரியரின் நித்திய கருமங்கள் கூறப்பட்டுள்ளன. குளிர்ந்த நீரில் நீராடுதல், ஆன்மார்த்த பூசை, பரமார்த்த பூசை, சிவ-சின்னம் தரித்தல், வணங்கும் முறை, உண்ணும் முறை முதலானவை இப் பகுதியில் கூறப்பட்டுள்ளன. சிவபூசை பற்றிய செய்திகள் இதில் 572 குறட்பாக்களில் சொல்லப்பட்டுள்ளன.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005