சைவசமயக் கலைக்களஞ்சியம்
Jump to navigation
Jump to search
சைவசமயக் கலைக்களஞ்சியம் என்பது 2006 ஆண்டு முதல் 2012 ஆண்டு வரையிலான காலப் பகுதியில் சேக்கிழார் மனித வளமேம்பாட்டு அறக்கட்டளையினால் வெளியிடப்பட்ட சைவசமயம் பற்றிய ஒரு தமிழ்க் கலைக்களஞ்சியம் ஆகும். [1] இந்தக் கலைக்களஞ்சியம் பத்து தொகுதிகளையும், 22 ஆயிரம் தலைமைப் பதிவுகளையும், 51 ஆயிரம் துணைப் பதிவுகளையும் கொண்டாதாகும்.[2]
இதன் தலைமைப் பதிப்பாசிரியர் பேராசிரியர் இரா. செல்வக்கணபதி ஆவார்.
தொகுதிகள்
சைவ சமயக் கலைக் களஞ்சியத்தின் தொகுதிகள் கீழ் கொடுக்கப்பட்டுள்ளன.
- சைவ சமயம் – தமிழகம் (புதுச்சேரி மாநிலம் உட்பட)
- சைவ சமயம் - உலகம் (தமிழகத்துக்கு அப்பால்)
- சைவத்திருமுறைகள்
- திருமுறைத் தலங்கள்
- பிற்காலத் தலங்கள்
- சைவ சமய அருளாளர்கள்
- சைவ சமய அருள் நூல்கள்
- சைவ சித்தாந்தம்
- சைவ சமய அமைப்புகள்
- தோரணவாயில்
ஆசிரியர்கள்
இந்தக் கலைக்களஞ்சியத்தினை 50 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவோடு 220 சைவத் தமிழ் அறிஞர்களைக் கொண்ட ஆசிரியர் குழுவோடு இணைந்து பேராசிரியர் இரா. செல்வக்கணபதி உருவாக்கினார்.
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ சைவ சமயக் கலைக் களஞ்சியம் தமிழ் மொழிக்கு கிடைத்த கொடை: துணைவேந்தர் ம.திருமலை
- ↑ "சைவ – சமயக் கலைக் களஞ்சியம்" இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304132451/http://omsakthionline.com/?aanmigam=%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE&publish=3743.
வெளி இணைப்புக்கள்
- சேக்கிழார் மனித வளமேம்பாட்டு அறக்கட்டளை பரணிடப்பட்டது 2013-05-22 at the வந்தவழி இயந்திரம்
- சைவ சமய கலைக்களஞ்சியம் - தினமணி நூல் மதிப்புரை