சேறைக் கவிராச பிள்ளை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கவிராச பிள்ளை என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர். இவர் சேறைக் கவிராசன் என்றும் போற்றப்படுகிறார். இந்தப் பெயரை இவர் தன் உலாக் கண்ணியிலேயே குறிப்பிட்டுள்ளார்.[1] இவர் கருணேசன் [2] மரபினர்.

இதே நூற்றாண்டில் வாழ்ந்த வீரை கவிராச பண்டிதன் என்பவர் சௌந்தரிய லகரி என்னும் நூலை இயற்றியுள்ளார். இவரிலிருந்து வேறு பிரித்துக்கஃ காட்டவே இவர் தம்மைச் ‘சேறைக் கவிராசன்’ எனக் கூறிக்கொண்டார். சேறை என்னும் ஊர் திருச்சேறை என வழங்கப்படும் திருமால் பதி.[3]

அதிவீரராம பாண்டியருக்கு இவர் எழுதி அனுப்பியதாக ஒரு சீட்டுக்கவி பாடல் உண்டு. எனவே இவரது காலம் அந்த அரசன் வாழ்ந்த 16 ஆம் நூற்றாண்டு எனத் தெரிகிறது.

இவரால் பாடப்பட்ட நூல்கள்:

என்பன.

இவரை ஆதரித்த வள்ளல் திருகாளத்தியை சேர்ந்த வேங்கடராச செங்குந்த முதலியார்.[4]

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. செவி ராசியம் கடந்த சேறைக் – கவிராசன்
    சொன்ன உரை படித்துத் சோதி பெறத் தாலாட்டி
  2. கணக்கர் என்னும் கருணீகர்
  3. தஞ்சை மாவட்டத்தில் உள்ள இந்த ஊரின் சாரநாதப் பெருமாள் மீது திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரங்கள் உள்ளன.
  4. https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZh6jZpy.TVA_BOK_0007898/page/100/mode/1up?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D
"https://tamilar.wiki/index.php?title=சேறைக்_கவிராச_பிள்ளை&oldid=18281" இருந்து மீள்விக்கப்பட்டது