செம போத ஆகாதே

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
Semma Botha Aagathey
இயக்கம்Badri Venkatesh
தயாரிப்புஅதர்வா
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஅதர்வா
Mishti
Anaika Soti
ஒளிப்பதிவுGopi Amarnath
படத்தொகுப்புPraveen K. L.
கலையகம்Kickass Entertainment
வெளியீடு29 சூன் 2018 (2018-06-29)
நாடுIndia
மொழிTamil

செம போத ஆகாதே ( ஆங்கிலம் : Semma Botha Aagathey ) பத்ரி வெங்கடேஷ் இயக்கி 2018ல் வெளிவந்த இந்திய தமிழ்- மொழி அதிரடித் திரைப்படம் ஆகும். இப்படத்தின் வசனங்களை ஜி.ராதாகிருஷ்ணன் எழுதியுள்ளார். இந்த திரைப்படத்தை நடிகர் அதர்வா தயாரித்து நடித்துள்ளார்.மேலும், மிஷ்டி மற்றும் அனிகா சோதி முக்கியமான பெண் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்படம் 2016 ஜனவரியில் [1] தயாரிப்பைத் தொடங்கி 29 ஜூன் 2018 அன்று உலகளவில் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் திரைப்பட வசூல் மோசமானதாக இருந்தது.

கதை

ரமேஷ் ( அதர்வா ) போதை தெளிந்து எழுந்து, முந்தைய நாளின் நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டு வருவது போல படம் தொடங்குகிறது. தனது காதலி மது ( மிஷ்டி ) உடனான காதல் பிரிந்த பிறகு, அவர் சோகமாக இருக்கிறார், மேலும் அவரது நண்பர் நந்துவுடன் சேர்ந்து ( கருணாகரன் ) நிறைய குடிக்கிறார். அவரது ஆலோசனையின் பேரில், ரமேஷ் நினா என்ற ஒரு பெண்ணை ( அனிகா சோதி ) தனது வீட்டில் தங்க வைக்கிறார். பக்கத்து வீட்டில் குடியிருக்கும் தேவியின் ( தேவதர்சினி ) மருத்துவ அவசர நிலைமை காரணமாக ரமேஷ் வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கிறது. அவர் விரைவில் திரும்பி வருவதாக உறுதியளித்து, தனது வீட்டிற்குள் காத்திருக்குமாறு, நினாவிடம் கூறி செல்கிறார். அவர் திரும்பி வரும்போது, மர்மமான சூழ்நிலையில் அவள் இறந்து கிடப்பதை அவன் காண்கிறான். இதனால் ரமேஷ் அதிர்ச்சியடைந்து அவளைப் பற்றிய விவரங்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறான். அவளது பையில் இருந்த உணவக ரசீதினை வைத்து, உணவகத்திற்கு சென்று சி.சி.டி.வி காட்சிகளை சரிபார்க்கிறான், அதில் ரவி ( பிரின்சு நிதிக் ) என்ற மற்றொரு நபர் தன்னைச் சந்திப்பதற்கு முன்பு அவளுடன் வந்திருப்பதைக் காண்கிறார். ரமேஷ் தனது கைபேசி உதவியுடன், அவர் நினாவின் வீட்டு முகவரியைக் கண்டுபிடித்து, பாலக்காடுக்குச் செல்கிறார். நந்துவிடம் தனது வீட்டில் தங்கி இறந்துவிட்ட நினாவின் உடலைக் பாதுகாக்கச் சொல்கிறான். நினாவின் குடும்பத்தினரிடமிருந்து எந்த தகவலையும் ரமேஷால் கண்டுபிடிக்க முடியவில்லை, ஆனால் நினாவின் சகோதரி சேகருக்கு ( ஜான் விஜய் ) அழைப்பு விடுத்து ரமேஷ் பற்றி அவருக்குத் தெரிவிக்கிறார்.

சேகர் ரமேஷைக் கண்டுபிடித்து நினா மற்றும் ரவி பற்றி கேட்கிறார். ரவி ஒரு உதவியாளர் என்றும் அவர் பணியாற்றும் அரசியல்வாதியிடமிருந்து பணம் மற்றும் ஆவணங்களை அபகரித்ததாகவும் அவர் கூறுகிறார். ரமேஷ் சேகரிடமிருந்து தப்பிக்கிறான். நினா எவ்வாறு மர்மமான முறையில் இறந்தார், ரமேஷ் இந்த பிரச்சனையிலிருந்து எவ்வாறு மீண்டு வருகிறார் என்பதாக கதை செல்கிறது.

தயாரிப்பு

1 ஜனவரி 2016 அன்று, அதர்வா கிகாஸ் என்டர்டெயின்மென்ட் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார், மேலும் அவர் பானா காத்தாடி (2010) திரைப்படத்தில் தன்னை அறிமுகப்படுத்திய பத்னா வெங்கடேஷ் இயக்கத்தில் ஒரு படத்தைத் தயாரிப்பதாக கூறினார். ஒரு வாரம் கழித்து அதர்வா, தான் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக வெளிப்படுத்தினார்.[2][3] ஏப்ரல் 2016 இல், ஜான் விஜய் மற்றும் கருணாகரன் ஆகியோரைப் போலவே நடிகைகள் மிஷ்டி மற்றும் அனைகா சோதி ஆகியோர் படத்தின் நடிகர்களுடன் இணைந்தனர்.[4] இப்படம் 2016 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் படமாக்கப்பட்டது.[5]

செம போத ஆகாதேயின் ஒலிப்பதிவு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து ஏற்பாடு செய்த ஐந்து பாடல்களைக் கொண்டுள்ளது.[6]

வெளியீடு

இப்படத்தின் தமிழக திரைப்பட உரிமைகள் 4.5 கோடிக்கு விற்கப்பட்டன.[7] . படத்தின் செயற்கைக்கோள் உரிமையை ராஜ் தொலைக்காட்சி வாங்கியது.

மேற்கோள்கள்

  1. "'Semma Botha Aagathey' very different film for Atharvaa: Director". 11 April 2016.
  2. "Atharvaa turns producer". 1 January 2016 – via The Hindu.
  3. "Atharvaa and Badri Venkat to make a film together, again - Times of India".
  4. "Anaika plays a bold role in Atharvaa's next - Times of India".
  5. "Yuvan's single track has risky stunts performed by Atharvaa - Times of India".
  6. "Semma Botha Aagathey by Yuvan Shankar Raja". Saavn. Archived from the original on 2018-08-28. பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
  7. "Semma Botha Aagatha TN theatrical rights".

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=செம_போத_ஆகாதே&oldid=33560" இருந்து மீள்விக்கப்பட்டது