செம்பியன் நிலவழகன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
செம்பியன் நிலவழகன்
பிறப்புஇயற்பெயர்: ஜெயராமன்
தந்தை:கிருஷ்ணப்பிள்ளை
தாய்:பச்சையம்மாள்
நாள்:(1937-07-10)சூலை 10, 1937
இடம்:செம்பியன் மங்கலம் திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
தொழில்ஆசிரியர்
எழுத்தாளர்
தேசியம்இந்தியர்
வகைமரபுக் கவிதைகள்
திருக்குறள் உரை
காவியம்
கருப்பொருள்நீதி
துணைவர்வசந்தி
பிள்ளைகள்மணிமன்னன்
மணிமொழி

செம்பியன் நிலவழகன் என்பவர் தமிழ் புலவர்களுள் ஒருவராவார்.[1] இவரது இயற்பெயர் ஜெயராமன். இவர் தன் ஊரின் பெயரைத் தனது புனைப்பெயருக்கு முன்னொட்டாக அமைத்துக்கொண்டுள்ளார்.

பிறப்பும் படிப்பும்

நிலவழகன் திருவண்ணாமலை மாவட்டம் செம்பியன் மங்களம் எனும் ஊரில் 10 ஜூலை 1937 இல் செயராமன், பச்சையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் புலவர் பட்டயம் பெற்றவர். பள்ளியில் ஆசிரியராப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

தொகுப்பு நூல்

  • தேம்பாவமுதம்

இவர் இயற்றிய பாடல்கள் தேம்பாவமுதம் என்னும் தலைப்பில் இவரது மரபுக் கவிதைகள் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.[2][3] இதில் நன்மொழி நானாறு, இனியவை ஈராறு, நம்பினார் கெடுவதில்லை போன்ற 45 தலைப்புகளில் வெண்பா, விருத்தம், கட்டளைக் கலித்துறை, ஆசிரியப்பா பாரதியைப் பாவேந்தர் என்று குறிப்பிடும் பாடல்,[4] முதலான யாப்பியல் நெறியில் அமைந்த பாடல்கள் உள்ளன. இரண்டாம் தொகுதியில் தமிழ் காக்கப் புறப்படு, கம்பன் கவி, விலையேற்றம் முதலான 132 தொகுப்புகளில் பாடல்கள் உள்ளன. ஆங்காங்கே சில இசைப்பாடல்களும் உள்ளன.

பாடல் எடுத்துகாட்டு

பட்டது போதும் உறக்கமும் போதும் படுதுயரால்
கெட்டது போதும் இனியும் உறங்கிக் கிடப்பதுவோ
விட்டது துன்பம் விளைந்தது வீரம் விறுவிறுப்பாய்ச்
சட்டென ஆர்த்தெழு வோம்’தமிழ் ஈழம்’ தழைத்திடவே. (கட்டளைக் கலித்துறை) [5]

சிறப்புக் கலையனைத்தும் செம்மொழியி னூடே
சிறப்பாய் நிறைந்தே சிறக்கும் - சிறப்புறவே
எல்லாம் அறிந்திடலாம் எல்லாமும் கற்றிடலாம்
இல்லை இதற்கோர் இணை. (வெண்பா) [6]

பிற நூல்கள்

  • பழகுதமிழ்ப் பாட்டெழுதும் பாங்கு (யாப்பியல்) [7]

இதில் இலக்கணம் கூறும் யாப்பு உறுப்புகளுக்கு எளிய முறையில் விளக்கம் தரப்பட்டுள்ளது. பிற்காலத்திய கும்மி, சிந்து, வண்ணம், நாட்டுப்புறப் பாடல்|நாட்டுப்பாடல்]] ஆகியவற்றிற்கும் விளக்கங்கள் உள்ளன.[8]

  • பொன்னாத்தாள் [9]
    இது வெண்பா, அகவல், விருத்தம் ஆகிய மரபுப் பாடலகளால் காவியமாகப் படைக்கப்பட்ட ஒரு காவியம்
  • திருக்குறள் மூலமும் மெய்யுரையும் [10][11]
    இந்த நூல் வாலறிவன் வாழ்த்து என்னும் தலைப்பில் அமைந்துள்ள ஆறு வெண்பாக்களுடனும், நூன்முகம் என்னும் தலைப்பில் அமைந்துள்ள ஆறு வெண்பாக்களுடனும் தொடங்கி 1330 குறட்பாக்களுக்கும் சுருக்கமான கருத்துரை வழங்குகிறது.
  • ஆதிபகவன் யார்

திருக்குறள் முதல் குறளிலுள்ள தொடருக்கு இந்த நூல் விளக்கம் தருகிறது.[12]

மேற்கோள்

  1. https://m.dinamani.com/all-editions/edition-chennai/2011/feb/01/தமிழ்-திருவிழா-305254.html[தொடர்பிழந்த இணைப்பு]
  2. முதல் தொகுதி 240 பக்கங்கள், இரண்டாம் தொகுதி 240 பக்கங்கள்
  3. கங்காராணி பதிப்பகம், பொழிச்சலூர், சென்னை 74, ஆண்டு 2017
  4. முதல் தொகுதி, பக்கம் 179
  5. தொகுதி 2 பக்கம் 73
  6. செம்மொழி அந்தாதி என்னும் தலைப்பில் உள்ள 10 அந்தாதிப் பாடல்களில் 5-ஆம் பாடல், முதல் தொகுதி, பக்கம் 116
  7. கங்காராணி பதிப்பகம், பொழிச்சலார், சென்னை 74, 2017, 176 பக்கம்
  8. பக்கம் 163 முதல்
  9. மணிமன்னன் வெளியீடு, புலிவானந்தல், போளூர் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் 606 904, ஏப்ரல் 2001
  10. ஆதிபகவன் நிலையம், உள்ளகரம், சென்னை 91, 12 ஆம் பதிப்பு, ஏப்பிரல் 2018
  11. திருக்குறள் மூலமும் மெய்யுரையும் - பதிவிறக்கம் செய்ய
  12. விளக்கம்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=செம்பியன்_நிலவழகன்&oldid=18285" இருந்து மீள்விக்கப்பட்டது