செந்தில் குமார்
செந்தில் குமார். ஜி | |
---|---|
செந்தில் வெண்ணிலா வீடு இசை வெளியீட்டு விழாவில் | |
பிறப்பு | அக்டோபர் 18, 1978 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
மற்ற பெயர்கள் | மிர்ர்ச்சி செந்தில் |
பணி | நடிகர், வானொலி தொகுப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2003-தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | ஸ்ரீஜா சந்திரன் (2014-தற்போது வரை) |
மிர்ர்ச்சி செந்தில் (Senthil Kumar) என்று அறியப்படும் செந்தில் குமார் என்பவர் தமிழ்நாட்டு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் ரேடியோ மிர்ச்சி[1] என்னும் பிரபல வானொலி நிறுவனத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியைத் தொடங்கினார். இவர் மதுரை (2007-2009), சரவணன் மீனாட்சி (2011-2013), மாப்பிள்ளை (2016-2017) போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் தவமாய் தவமிருந்து (2005), பப்பாளி (2014), வெண்நிலா வீடு (2014)போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[2][3][4]
வாழ்க்கை வரலாறு
செந்தில் [5] 1978 அக்டோபர் 18 அன்று சென்னையில் கோவிந்தன், பிரேமாவதி அவர்களுக்கு மகனாக பிறந்தார். இவர் சென்னை பெரம்பூரில் உள்ள டான் போஸ்கோவில் பள்ளிப் படிப்பை முடித்தபின், பச்சையப்பா கல்லூரியிலும், மதுரை காமராஜ் பல்கலைகழகத்திலும்[6] உயர் கல்வியை முடித்தார். சில மாதங்கள் வங்கித்துறையில் பணியாற்றிவிட்டு, கலைத்துறைக்கு வந்தார்.
பணி விவரங்கள்
வானொலி
செந்தில் 2003 ஆம் ஆண்டு சென்னை ரேடியோ மிர்ர்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக[7] அறிமுகமானார். பின்பு கோவை ரேடியோ மிர்ர்ச்சியின் நிலைய தலைவராக நான்கு ஆண்டுகள் பணி ஆற்றினார். மிர்ர்ச்சி கோல்ட், மிர்ர்ச்சி பஜார், பேட்டை ராப், லவ் டாக்கீஸ் போன்ற பல நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தொகுத்து வழங்கியுள்ளார். இசைஞானி இளையராஜாவால் பாராட்டப்பட்ட 'நீங்க நான் ராஜா சார்'[8] நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சியில் 2007 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பப்பட்ட மதுரை[9] தொடரில் 'செய்கை சரவணன்' என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தார். இந்த தொடருக்கிருந்த வரவேற்பைத் தொடர்ந்து, சரவணன் மீனாட்சி[10][11][12][13] எனும் நெடுந்தொடரில் நடித்துள்ளார்.
திரைப்பட இயக்குனர் மனோபாலாவின் இயக்கத்தில் பாலிமர் தொலைக்காட்சியில் 777[14] குறுந்தொடரிலும் நடித்துள்ளார். அதை தொடர்ந்து 2016ஆம் ஆண்டு மாப்பிள்ளை எனும் தொடரிலும் 2018ஆம் ஆண்டு நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரிலும் நடித்துள்ளார். தொடர்களைத் தவிர செந்தில் பல நிகழ்ச்சிகளை விஜய் தொலைக்காட்சிக்காக தொகுத்து வழங்கியுள்ளார். தமிழ் சினிமா இந்த வாரம் என்னும் நிகழ்ச்சியில் பல திரைப்பட குழுவினருடன் இணைந்து பட விமர்சனம் செய்துள்ளார். பாலிமர் தொலைக்காட்சியில் பெண்களுக்கான பாக்சிங் நிகழ்ச்சியை செய்தார்.
திரைப்படங்கள்
செந்தில் இயக்குநர் சேரனால் தவமாய் தவமிருந்து என்னும் திரைப்படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார். இதில் இவர் சேரனின் சகோதரனாக நடித்ததற்காக பிலிம்பேர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டார். இதனை அடுத்து செங்காத்து பூமியிலே என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, கண் பேசும் வார்த்தைகள், வெண்ணிலா வீடு போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
விருதுகள்
- தவமாய் தவமிருந்து திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டார்.
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | விவரம் |
---|---|---|---|
2005 | தவமாய் தவமிருந்து | ராமநாதன் | |
2007 | எவனோ ஒருவன் | ||
2007 | சென்னை 600028 | ||
2012 | செங்காத்து பூமியிலே | சின்னசாமி | |
2013 | கண் பேசும் வார்த்தைகள் | மகேஷ் | |
2014 | வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் | ராஜா | |
2014 | பப்பாளி | கார்த்திக் | |
2014 | வெண்நிலா வீடு | கார்த்திக் | |
2015 | ரொம்ப நல்லவன் ட நீ | பாஸ்கர் | |
2018 | அண்ணனுக்கு ஜே |
தொடர்கள்
ஆண்டு | தொடர் | கதாபாத்திரம் | அலைவரிசை |
---|---|---|---|
2007-2009 | மதுரை | செய்கை சரவணன் | விஜய் தொலைக்காட்சி |
2011-2013 | சரவணன் மீனாட்சி | சரவணன் | |
2010 | கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம் | பாலா | |
2012 | 777 குறுந்தொடர் | பாலிமர் தொலைக்காட்சி | |
2016 | அச்சம் தவிர் | போட்டியாளராக | விஜய் தொலைக்காட்சி |
2016-2017 | மாப்பிள்ளை | செந்தில் | விஜய் தொலைக்காட்சி |
2017 | கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை | செந்தில் | வலைத் தொடர் |
2018—ஒளிபரப்பில் | நாம் இருவர் நமக்கு இருவர் | மாயன்/அரவிந்த் | விஜய் தொலைக்காட்சி |
2019 | கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை 2 | செந்தில் | வலைத் தொடர் |
வானொலி தொகுப்பாளராக
நிகழ்ச்சி | ஆண்டு | நேரம் | விவரம் |
---|---|---|---|
மிர்ர்ச்சி கோல்ட் | 2003 - 2007 | இரவு 9முதல் 11 வரை | பழைய திரைப்பாடல்களை ஒலிபரப்பும் நிகழ்ச்சி. |
மிர்ர்ச்சி பஜார் | 2005 முதல் 2007 வரை | காலை 11 முதல் மதியம் 2 வரை | இது பெண்களுக்கான நிகழ்ச்சி. |
பேட்டை ராப் | 2003 முதல் 2006 வரை | மாலை 4 | ஞாயிற்று கிழமை நிகழ்ச்சி. |
நீங்க நான் ராஜா சார் | 2010 முதல் | இரவு 9 முதல் 11 வரை | இளையராஜாவின் இசையில் பிறந்த பாடல்களை ஒலிபரப்பும் நிகழ்ச்சி. |
- லவ் டாக்கீஸ் என்னும் வானொலி சினிமா என்னும் புதுமையான நிகழ்ச்சியில் செந்தில் பங்களித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக
- தமிழ் சினிமா இந்த வாரம் - ஸ்டார் விஜய் தொலைக்காட்சிக்காக
- கடல் திரைப்படம் ஸ்பெஷல் - ஸ்டார் விஜய் தொலைக்காட்சிக்காக
- பரதேசி திரைப்படம் ஸ்பெஷல் - ஸ்டார் விஜய் தொலைக்காட்சிக்காக
- அஜித் ஸ்பெஷல் - ஸ்டார் விஜய் தொலைக்காட்சிக்காக
- தனுஷ் ஸ்பெஷல் - ஸ்டார் விஜய் தொலைக்காட்சிக்காக
மேற்கோள்கள்
- ↑ http://www.radiomirchi.com/coimbatore/rj/senthil/28154
- ↑ "Mirchi Senthil Biography Profile - Actors Tamil". Cinema.pluz.in இம் மூலத்தில் இருந்து 21 செப்டம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130921023358/http://cinema.pluz.in/celebs/kollywood/actors/25236/profile.htm. பார்த்த நாள்: 13 September 2013.
- ↑ "Actor Mirchi Senthil | Mirchi Senthil Latest News | Mirchi Senthil Biography | Mirchi Senthil Filmography | Mirchi Senthil Photos | Mirchi Senthil Videos". Spicyonion.com இம் மூலத்தில் இருந்து 21 செப்டம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130921053628/http://spicyonion.com/actor/mirchi-senthil/. பார்த்த நாள்: 13 September 2013.
- ↑ Malini, Shankaran. "A gifted multi-tasker!". The New Indian Express. http://newindianexpress.com/entertainment/tamil/article362320.ece. பார்த்த நாள்: 13 September 2013.
- ↑ "Radio Rage". The Hindu. 25 August 2003 இம் மூலத்தில் இருந்து 14 ஏப்ரல் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040414150225/http://www.hindu.com/thehindu/mp/2003/08/25/stories/2003082500010100.htm. பார்த்த நாள்: 13 September 2013.
- ↑ http://www.youtube.com/watch?v=xwK0zzTu7yc
- ↑ http://www.radiomirchi.com/chennai/rj/senthil/239602
- ↑ "Neenga Naan Raja Sir - Program Guide | Chennai Radio Mirchi 98.3 FM". Radiomirchi.com. http://www.radiomirchi.com/chennai/program-guide/show/neenga-naan-raja-sir/541. பார்த்த நாள்: 13 September 2013.
- ↑ "Thoughts on Madurai – a Star Vijay serial | VM\'s Random Ramblings". Vmminerva.wordpress.com. 23 March 2008. http://vmminerva.wordpress.com/2008/03/23/thoughts-on-madurai-a-star-vijay-serial/. பார்த்த நாள்: 13 September 2013.
- ↑ News, Express (28 August 2012). "Mylapore academy honours veterans". The New Indian Express. http://newindianexpress.com/cities/chennai/article596859.ece. பார்த்த நாள்: 13 September 2013.
- ↑ "Celebrating a reel wedding...". The Hindu. 15 June 2012. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/celebrating-a-reel-wedding/article3529686.ece. பார்த்த நாள்: 13 September 2013.
- ↑ "Star-studded affair". The Hindu. 19 May 2012. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article3433996.ece. பார்த்த நாள்: 13 September 2013.
- ↑ "Senthil-Sreeja of Saravanan Meenatchi on big screen". Chakpak. 26 December 2012 இம் மூலத்தில் இருந்து 21 செப்டம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130921053323/http://www.chakpak.com/content/news/senthil-sreeja-saravanan-meenatchi-big-screen. பார்த்த நாள்: 13 September 2013.
- ↑ "777 - Triple Seven - A New Approach To Serials - Polimer TV". YouTube. http://www.youtube.com/watch?v=qQGPubwzTtE. பார்த்த நாள்: 13 September 2013.