செங்டே மலை விடுதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மலை விடுதி, செங்டே
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
Chengde Mountain Resort 1.jpg
மலை விடுதி, செங்டே
அமைவிடம்செங்டே, ஏபெய் மாகாணம், சீனா
பகுதிமலை விடுதியும் அதன் வெளிப்புற கோயில்களும், செங்டே
கட்டளை விதிபண்பாட்டுக் களம்: (ii), (iv)
உசாத்துணை703
பதிவு1994 (18-ஆம் அமர்வு)

செங்டே மலை விடுதி (Chengde Mountain Resort) என்பது சீனாவின் ஏபெய் மாகாணத்திலுள்ள செங்டே நகரில் அமைந்துள்ள பேரரசின் அரண்மனைகளையும், தோட்டங்ளையும் கொண்ட ஓர் பெரிய வளாகமாகும். சீன நிலப்பரப்புகள் மற்றும் கட்டிடக்கலைகளின் பரந்த மற்றும் அறியவகைச் சேகரிப்பின் காரணமாக, இந்த விடுதி பல வழிகளில் சீனாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பல்வேறு வகையான தோட்டங்கள், அடுக்குத் தூபிகள், கோயில்கள் மற்றும் அரண்மனைகளின் உச்சம் ஆகும்.

சீனாவின் நான்கு பிரபலமான தோட்டங்களில் ஒன்றான இது, உலக பாரம்பரிய தளம், தேசிய நினைவுச்சின்ன பாதுகாப்பு பிரிவு, சீனாவில் 5 ஏ வகுப்பு சுற்றுலா தலங்களில் அடங்கும். [1]

பெயர்

செங்டே மலை விடுதி சில நேரங்களில் இரெஹே ஜிங்காங் அல்லது இலிகாங் என்றும் அழைக்கப்படுகிறது.

வரலாறு

விடுதியிலுள்ள சிங் வம்ச வரைபடம்

சிங் வம்சத்தின் போது 1703 மற்றும் 1792 க்கு இடையில் கட்டப்பட்ட இந்த மலை விடுதியை கட்டி முடிக்க 89 ஆண்டுகள் ஆனது. இதன் மொத்த பரப்பளவு 5.6 கிமீ 2 (2.2 சதுர மைல்) ஆகும். செங்டே நகர்ப்புறத்தின் கிட்டத்தட்ட பாதி. இது அரண்மனைகள், நிர்வாக மற்றும் சடங்கு கட்டிடங்களைக் கொண்ட பரந்த வளாகமாகும். பல்வேறு கட்டடக்கலை பாணிகள் மற்றும் ஏகாதிபத்திய தோட்டங்களின் கோயில்கள், ஏரிகள், மேய்ச்சல் நிலங்கள் மற்றும் காடுகளின் நிலப்பரப்பில் இணக்கமாக கலக்கின்றன.

காலநிலை

இந்த விடுதி சூடான மிதமான மண்டலத்திலிருந்து குளிர்ந்த மிதமான மண்டலத்திற்கு மாறும் மண்டலத்தில் அமைந்துள்ளது. இது அரை மிதமான, அரை வறண்ட கண்ட பருவமழை காலநிலையைக் கொண்டுள்ளது. இது பகல் மற்றும் இரவுகளுக்கிடையே வெப்பநிலையில் பெரிய வித்தியாசத்தைக் கொண்டுள்ளது. குளிர்காலத்தில், இது குளிர்ச்சியாகவும், சிறிது பனியுடனும் இருக்கும். இங்கு கோடையில் அதிக இடியுடன் கூடிய மழை பெய்யும். அடிப்படையில் சூடான காலம் இல்லை. மேலும், இது அனைத்துப் பருவத்திலும் பயணம் செய்ய ஏற்றது. ஆனால் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை சிறந்தது. [2]

காணக்கூடிய இடங்கள்

இந்த விடுதி 72 அழகிய இடங்களுக்கு மிகவும் பிரபலமானது. அவை காங்சி மற்றும் கியான்லாங் பேரரசர்களால் பெயரிடப்பட்டன. இங்குள்ள ஏரிப் பகுதியைச் சுற்றியுள்ள பல அழகிய இடங்கள் தெற்கு சீனாவின் புகழ்பெற்ற இயற்கை தோட்டங்களிலிருந்து நகலெடுக்கப்பட்டன. உதாரணமாக, பசுமை தாமரை தீவின் முக்கிய கட்டிடம், "மூடுபனி மற்றும் மழை கோபுரம்", செஜியாங் மாகாணத்தின் ஜியாக்சிங்கில் உள்ள நன்ஹு ஏரியில் உள்ள ஒரு கோபுரத்தின் மாதிரியாக உள்ளது.

விடுதியின் வெற்று பகுதி மங்கோலிய புல்வெளிகளின் காட்சிகளின் சிறப்பியல்புகளையும் கொண்டுள்ளது. காடுகள் நிறைந்த மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் பல்வேறு கட்டிடங்களால் சூழப்பட்டுள்ளன. இதில் 70 மீட்டர் (230 அடி) உயரமான கல் சீன அடுக்குத் தூபி, சீனாவின் மிக உயரமான ஒன்றாகும். இது 1751 ஆம் ஆண்டில் கியான்லாங் பேரரசரின் ஆட்சியில் கட்டப்பட்டது. இந்தத் தூபி ஒரு எண்கோண அடித்தளத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒன்பது பக்கங்கள் வண்ணமயமான மெருகூட்டப்பட்ட ஓடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும் இதன் கோபுரம் ஒரு மெல்லியப் பூச்சால் சூழப்பட்டுள்ளது.

1994 திசம்பரில் இந்த விடுதி யுனெஸ்கோவால் அதன் உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் பட்டியலிடப்பட்டது.

நிகழ்வுகள்

2018 மகளிர் பாண்டி உலகப் போட்டிகள் இந்த வளாகத்தில் உள்ள ஏரியில் இயற்கையாகவே உறைந்த பனியில் நடைபெற்றது.

புகைப்படத் தொகுப்பு

மேற்கோள்கள்

  1. "中华人民共和国文化和旅游部". www.mcprc.gov.cn. Archived from the original on 2007-11-11. பார்க்கப்பட்ட நாள் 2018-07-05.
  2. "承德-气象数据-中国天气网". www.weather.com.cn. பார்க்கப்பட்ட நாள் 2018-07-05.

மேலும் படிக்க

  • Hevia, James Louis. "World Heritage, National Culture, and the Restoration of Chengde." positions: east Asia cultures critique 9, no. 1 (2001): 219-43.
  • In 1998 Foreign Languages Press published "Imperial Resort at Chengde" to guide English language visitors.
"https://tamilar.wiki/index.php?title=செங்டே_மலை_விடுதி&oldid=28732" இருந்து மீள்விக்கப்பட்டது