சூரிய தோத்திரம்
Jump to navigation
Jump to search
சூரிய தோத்திரம் என்பது ஒரு சிறுநூல். தமிழில் 14 பாடல்கள் மட்டும் கொண்டது. இந்த நூலின் மற்றொரு பெயர் உதய திவாகர தோத்திரம். கமலை ஞானப்பிரகாசரின் மாணாக்கர்களில் இருவர் இதனைச் செய்திருக்கிறார். நூல் தோன்றிய காலம் 16 ஆம் நூற்றாண்டு.
சிவபூசையில் மூன்று நிலைகள் உண்டு. அனுட்டானம், சூரிய-பூசை, சிவ-பூசை என்பன அவை. இவற்றை விளக்கி கமலை ஞானப்பிரகாசர் அகவல் பாவால் ஒரு நூல் செய்திருக்கிறார். இம்மூன்றனுள் சூரிய தோத்திரம் பற்றி விளக்கிக் கூறுவதே இந்த நூல்.
பாடல் (எடுத்துக்காட்டு) [1]
கிளர் கதிர் ஆயிரமும் கெழுமி எழுந்தருளும்
வளர் இள ஒளி முகவா வானவர் நாயகனே
உளமுற உள் புகுவாய் உதய திவாகரனே
பத்தியினால் அடியேன் பாடிய பதினாலும்
நித்தம் நினைந்து உருகி நெஞ்சில் வைப்பவர் தம்
வைப்பும் இருப்பும் அவர் வானுலகும் தருமே
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005
அடிக்குறிப்பு
- ↑ பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது