சு. சுப்பிரமணியம்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
சு. சுப்பிரமணியம் |
---|---|
பிறந்ததிகதி | 25 அக்டோபர் 1940 |
இறப்பு | 10 செப்டம்பர் 2023 |
அறியப்படுவது | எழுத்தாளர் அரசியல்வாதி |
சு. சுப்பிரமணியம் (டத்தோ டாக்டர் சுப்பிரமணியம் 25 அக்டோபர் 1940 – 10 செப்டம்பர் 2023) மலேசிய எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் ஒரு மருத்துவரும், ஓய்வு பெற்ற மாநிலச் சட்டமன்ற உறுப்பினருமாவார். மலேசிய இந்திய காங்கிரசு கெடா மாநிலத் தலைவராகப் பத்தாண்டு காலமும், மூன்று தவணைகள் சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு தவணை மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
மலேசியர் இந்தியர் சங்கத்தின் பிரமுகரான இவர், முழு நேர அரசியல் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின் அரசியல் சமுதாயம் சார்ந்த கட்டுரைகள் எழுதி வருகிறார். அவருடைய அரசியல் சமூக அனுபவங்களை உள்ளடக்கிய கட்டுரைகள் "இதயம்" இதழில் 54 வாரங்கள் தொடராக வெளிவந்துள்ளது.
நூல்கள்
- "மனதில் வரைந்த மனிதர்கள்" (அச்சில்)
பொதுப் பணிகள்
இவர் ரோட்டரி கிளப்பின் தலைவராகவும் இருந்துள்ளார். தமிழ் எழுத்தாளர்களுக்கு ஊக்குவிப்பு நிதி வழங்கியுள்ளார். தமிழ் எழுத்தாளர் சங்கக் கட்டிடம் அமைவதற்கும் உதவியுள்ளார்.
விருதுகள்
- ஜே. பி. பட்டம் (அரசாங்கம் - 1983)
- டத்தோ பட்டம் (அரசாங்கம் - 1987)