சு. சுப்பிரமணியன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சு. சுப்பிரமணியன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
சு. சுப்பிரமணியன்
பிறந்ததிகதி சூன் 15 1941
அறியப்படுவது எழுத்தாளர்


சு. சுப்பிரமணியன் (பிறப்பு: சூன் 15 1941) மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவார். பத்திரிகை நிருபரான இவர் பாவலர் திருக்குறள் மணியன் எனும் புனைப்பெயரில் எழுதிவருபவர்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1953 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக திருக்குறளில் கொண்ட பெரும் ஈடுபாட்டால் அதைப்பற்றி எழுதியும் பல மேடைகளில் பேசியும் வந்துள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

நூல்கள்

கட்டுரை

  • "மலேசியாவில் அண்ணாவின் சொற்பொழிவுகள்"
  • "எளிய இனிய இலக்கணம்"
  • "ஒரு வள்ளலின் வரலாறு"

கவிதைகள்

  • "எரிமலை"
  • "பொன் மகனைப் பாடும் பூங்குயில்கள்"

பரிசில்களும், விருதுகளும்

  • "திருக்குறள்" விருது (1954)
  • "தமிழ் மறைக் காவலர்"
  • "இலக்கியச் செல்வர்"
  • "திருக்குறள் மணி"

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=சு._சுப்பிரமணியன்&oldid=6256" இருந்து மீள்விக்கப்பட்டது