சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகம்
Universiti Pendidikan Sultan Idris
Sultan Idris Education University
اونيۏرسيتي ڤنديديقن سلطان إدريس
Sultan Idris Education University Sultan Abdul Jalil Campus entrance (220712).jpg
குறிக்கோளுரைஅறிவு என்பது தூய குணத்தின் கலங்கரை விளக்கம்
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
(Pengetahuan Suluh Budiman)
(Knowledge is the Beacon of Pure Character)
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம்29 நவம்பர் 1922
வேந்தர்துவாங்கு சார சலீம்
(Tuanku Zara Salim)
துணை வேந்தர்டத்தோ டாக்டர் அமீன் தாப்
Prof. Dato' Dr. Md. Amin Md. Taff
அமைவிடம்
35900
, , ,
வளாகம்1. Sultan Abdul Jalil Campus 2. Sultan Azlan Shah Campus
நிறங்கள்நீலம், மஞ்சள், சிவப்பு
சுருக்கப் பெயர்UPSI
சேர்ப்புACU
இணையதளம்www.upsi.edu.my

சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகம் என்பது (ஆங்கிலம்: University Pendidikan Sultan Idris) என்பது ஒரு மலேசிய ஆசிரியர் பல்கலைக்கழகம் ஆகும்.[1] 1922-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஓர் ஆரிரையர்ப் பயிற்சிக் கல்லூரியாக தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், மலேசியாவின் பழையாமைன கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும்.

இங்கு தமிழ்வழி ஆசிரியர் இளங்கலைப் பயிற்சியும் வழங்கப்படுகிறது.[2]

வரலாறு

மலாயாவின் முதல் ஆசிரியர்ப் பயிற்சி மையம் முதலில் தைப்பிங்கில் இருந்தது. அப்போது அது மாத்தாங் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி (Matang Teacher Training College) என்று அறியப்பட்டது. 1913-ஆம் ஆண்டு தைப்பிங் மலாய் நிலக்கிழார், நிகா இப்ராகீம் (Ngah Ibrahim) அவர்களின் மாளிகையில் மலாயாவின் முதல் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி உருவாக்கப்பட்டது.

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கல்லூரி தஞ்சோங் மாலிம் நகருக்கு மாற்றப்பட்டது; மற்றும் அதே நேரத்தில் பேராக் சுல்தான் அவர்களின் பெயரும் அந்த ஆசிரியர்ப் பயிற்சி மையத்திற்கு வழங்கப்பட்டது.

மலாய் ஆசிரியர்களுக்கு பயிற்சிக் கல்லூரி

1922-இல் மலாயா மலாய் பள்ளிகளின் துணை இயக்குநர் ஆர்.ஓ. வின்ஸ்டெட் (R.O. Winstedt) என்பவர் மலாய் ஆசிரியர்களுக்கு ஒரு பயிற்சிக் கல்லூரி உருவாக்கப்பட்ட வேண்டும் எனும் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்.

பேராக் மாநிலத்தின் 28-ஆவது சுல்தானான சுல்தான் இட்ரிசு முர்சிதுல் ஆசாம் சா (Sultan Idris Murshidul Azzam Shah of Perak) என்பவரின் பெயரால் பெயரிடப்பட்ட இந்தக் கல்லூரி 29 நவம்பர் 1922-ஆம் தேதி மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தலைமைச் செயலாளர் சர் ஜார்ஜ் மேக்சுவெல் (George Maxwell) அவர்களால் திறக்கப்பட்டது.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "About UPSI".
  2. Hussainmiya, B.A. (2000). "“Manufacturing Consensus”: The Role of the State Council in Brunei Darussalam" (in en). Journal of Southeast Asian Studies 31 (2): 321–350. doi:10.1017/S0022463400017586. பன்னாட்டுத் தர தொடர் எண்:1474-0680. https://www.cambridge.org/core/journals/journal-of-southeast-asian-studies/article/abs/manufacturing-consensus-the-role-of-the-state-council-in-brunei-darussalam/49BD9E3E073134BE6C7D58652F648F79#article. 

வெளி இணைப்புகள்