தமிழ்க்கல்வி ஆராய்ச்சி மாநாடு
Jump to navigation
Jump to search
தமிழ்க்கல்வி ஆராய்ச்சி மாநாடு என்பது 2012 மே 30, 31 திகதிகளில் மலேசியாவில் பேரா மாநிலத்தில் உள்ள சுல்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு தமிழ்க் கல்வி அனைத்துலக மாநாடு ஆகும். 'தமிழ்க் கற்றல் கற்பித்தலில் புத்தாக்கம்' என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெற்றது. தமிழ்க்கல்வி, தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் தொடர்பான பாடத் திட்டங்கள், தொழில்நுட்பங்கள், வியூகங்கள், சிக்கல்கள், புத்தாக்க முயற்சிகள் தொடர்பாக இந்த மாநாட்டில் ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டன.
"ஆசிரியர்கள், மாணவர்களின் கற்றல் சிக்கலைக் களையவும், தங்கள் பணித்திறனை மேம்படுத்திக்கொள்ளவும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்தை முன்வைத்து இந்த மாநாடு நடைபெறுவதாக இதன் ஏற்பாட்டுக்குழுச் செயலாளர் முனைவர் சாமிக்கண்ணு ஜபமணி தெரிவித்தார்."[1]