சுருள் ஏடுகள்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
படிமம்:TurinPapyrus1904.png
பாபிரஸ் காகிதத்தில் எழுதப்பட்ட எகிப்திய மன்னர்கள பட்டியலின் சுருளேடு
படிமம்:Psalms Scroll.jpg
சாக்கடல் சுருள் ஏடுகள்
படிமம்:Parliamentary archives.jpg
ஐக்கிய இராச்சியத்தின் சட்ட நூல்களின் சுருளேடுகள்

சுருள் ஏடுகள் (scroll) பாபிரஸ் போன்ற தடித்த காகிதம், ஆட்டுத்தோல், இளங்கன்றின் மெல்லிய தோல் மற்றும் மெல்லியச் செப்புத் தகடுகளில் எழுதுவதற்கு பயன்படுத்துவதாகும். இவைகளில் எழுதப்படும் கையெமுத்துப் பிரதிகள் சுருட்டி வைத்து பயன்படுத்துவதால் இதனை சுருள் ஏடுகள் என்று அழைக்கப்படுகிறது.[1]

புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 19-ஆம் வம்ச பார்வோன் இரண்டாம் ராமேசஸ் ஆட்சிக் காலத்தின் போது (கிமு 1279 – கிமு 1213), பாபிரஸ் எனும் தடித்த காகிதத்தில், பண்டைய எகிப்திய மன்னர்களின் பெயர்களுடன், வரலாற்றுக் குறிப்புகளை எழுதி வைத்தனர். இதனை துரின் மன்னர்கள் பட்டியல் என்பர்.[2]

கிமு மூன்றாம் நூற்றாண்டின் நடுப் பகுதி முதல், கிபி 70 ஆண்டு வரை எஸ்சேனியர்கள்[3] எனும் யூதக் குழுவினர் விவிலியம் மற்றும் விவிலியம் தொடர்பற்ற குறிப்புகளை பாபிரஸ் மற்றும் ஆட்டுத்தோல் மற்றும் செப்புத் தகடுகளில் அரமேயம் மற்றும் கிரேக்க மொழியில் எழுதி வைத்த சுருள் ஏடுகளை சாக்கடலின் வடமேற்கே உள்ள கும்ரான் குகைகளில் கிபி 1947-இல் கண்டுபிடித்தனர்.[4][5][6][7]

பண்டைய எழுது பொருட்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

-

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=சுருள்_ஏடுகள்&oldid=365621" இலிருந்து மீள்விக்கப்பட்டது