சுரபி (நடிகை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சுரபி
பிறப்புதில்லி, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2013–தற்போது

சுரபி (Surbhi, டிசம்பர் 7, 1993) தமிழ் திரையுலகில் நடித்து வரும் ஒரு இந்திய நடிகை ஆவார். 2013 ஆம் ஆண்டு வெளிவந்த இவன் வேற மாதிரி என்னும் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.[1]

தொழில் வாழ்க்கை

கலைக் கல்லூரியில் நுண்கலை இளநிலை பட்டப் படிப்பினை மேற்கொண்ட போது, திரைப்படத் துறையிலும் வடிவழகு துறையிலும் சுரபிக்கு ஆர்வம் ஏற்பட்டது. விக்ரம் பிரபுவின் இரண்டாவது படமான இவன் வேற மாதிரியில் விக்ரம் பிரபுவுக்கு இணையாக நடித்தார். இத்திரைப்படத்தில் பப்ளி, அப்பாவி பெண் பாத்திரத்தை ஏற்று நடித்த சுரபி, இயல்பான நடிப்பினை வெளிபடுத்தினார். இதன் மூலம் விஜய் விருதுகள் மற்றும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில் சிறந்த பெண் அறிமுக நாயகி விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டார்.[2][3]

அடுத்த 2014 இல் வேல்ராஜ் இயக்குனராக அறிமுகமான வேலையில்லா பட்டதாரி என்ற திரைப்படத்தில் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.[4][5] சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ஜீவா என்ற திரைப்படத்தில் நடிக்க முன்னதாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர், பரீட்சை காரணமாக அத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொண்டார். எனினும் இத்திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் நடித்துள்ளார். இவர் தற்போது ஒரு தமிழ் படத்திலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகின்றார்.[6]

திரைப்படப் பட்டியல்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்புகள்
2013 இவன் வேற மாதிரி மாலினி பரிந்துரை-சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருது
பரிந்துரை-சிறந்த பெண் அறிமுக நடிகை தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள்
2014 வேலையில்ல பட்டதாரி அனிதா
2014 ஜீவா பாடல் குணச்சித்திர தோற்றம் "ஒருத்தி மேலே"
2014 பீருவ தெலுங்கு படம்
2015 புகழ் படபிடிப்பில்
2023 டிடி ரிட்டர்ன்ஸ்

சான்றுகள்

  1. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/south-bound/article5080339.ece
  2. http://www.rediff.com/movies/report/review-ivan-veramathiri-is-an-average-entertainer/20131213.htm
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-13. பார்க்கப்பட்ட நாள் 2014-12-06. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Surabhis-special-role-in-Velai-illa-Pattadhari/articleshow/31476494.cms
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-29. பார்க்கப்பட்ட நாள் 2014-12-06.
  6. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Surbhi-goes-glam-for-her-Tollywood-debut/articleshow/37960052.cms

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சுரபி_(நடிகை)&oldid=22807" இருந்து மீள்விக்கப்பட்டது