சுனிதா ஜெயின்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சுனிதா ஜெயின் (Sunita Jain 1940–2017) ஓர் இந்திய அறிஞர், நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் ஆங்கிலம் மற்றும் இந்தி இலக்கியத்தின் கவிஞர். [1][2] டெல்லியின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் முன்னாள் பேராசிரியராகவும், மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறையின் தலைவராகவும் இருந்தார். [3] பல சமண எழுத்துக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் 60 க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இவர் தி வ்ரீலேண்ட் விருது (1969) மற்றும் மேரி சாண்டோஸ் ப்ரேரி ஷூனர் ஃபிக்சன் விருது (1970 மற்றும் 1971) ஆகியவற்றைப் பெற்றார். [4] 2004 ஆம் ஆண்டில் இந்திய அரசின் நான்காவது மிக உயரிய குடிமை விருதான பத்மசிறீ பெற்றார். [5] இந்தியில் சிறந்த இலக்கியப் பணிகளுக்காக கே.கே. பிர்லா அறக்கட்டளையால் 2015 ஆம் ஆண்டில் அவருக்கு வியாஸ் சம்மன் விருது வழங்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்தின் பர்த்வான் பல்கலைக்கழகத்தில் இருந்து முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

வாழ்க்கை

இந்திய மாநிலமான ஹரியானாவின் அம்பாலா மாவட்டத்தில் 1940 ஜூலை 13 ஆம் தேதி சமண குடும்பத்தில் பிறந்த சுனிதாவின் குடும்பம் பின்னர் டெல்லிக்கு குடிபெயர்ந்தது.[சான்று தேவை] டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்திரபிரஸ்தா மகளிர் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[சான்று தேவை]

ஜெயின் நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை படிப்பை மேற்கொண்டார். 1968 ஆம் ஆண்டில் அவர் நெப்ராஸ்காவின் லிங்கனுக்கு குடிபெயர்ந்தார், அங்கு அவர் நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். [6]

விருதுகள்

இந்தியப் பிரதமர் அப்துல் கலாமிடம் இருந்து பத்மசிறீ விருதினைப் பெறும் சுனிதா (2004)

இவர் 1969 இல் நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தின் தி வ்ரீலேண்ட் விருதையும் 1970 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை மேரி சாண்டோஸ் ப்ரேரி ஷூனர் பிக்சன் விருதையும் பெற்றார். [7] 1979 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் உத்தரபிரதேச இந்தி சன்ஸ்தான் விருதும், 1996 இல் டெல்லி இந்தி அகாடமி விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டில் இந்திய அரசின் நான்காவது மிக உயரிய குடிமை விருதான பத்மசிறீ பெற்றார்.நிரலா நமீத் விருது (1980), சாகித்யகர் சம்மன் (1996), மகாதேவி வர்மா சம்மன் (1997), [8] பிரபா கெதன் விருது, பிராமி சுந்தரி விருது, சுலோச்சினி எழுத்தாளர் விருது மற்றும் உ.பி. சாகித்ய பூஷண் விருது போன்ற பிற கவுரவங்களைப் பெற்றுள்ளார். இந்தியில் சிறந்த இலக்கியப் பணிகளுக்காக கே.கே. பிர்லா அறக்கட்டளையால் 2015 ஆம் ஆண்டில் அவருக்கு வியாஸ் சம்மன் வழங்கப்பட்டது.[சான்று தேவை]

இறப்பு

ஜெயின் புதுடெல்லியில் 11 டிசம்பர் 2017 அன்று ஒரு அரிய இரத்தக் கோளாறுடன் நோயினால் இறந்தார்.

மேற்கோள்கள்

  1. "Dr. Sunita Jain". Jain Samaj. 2015 இம் மூலத்தில் இருந்து 23 நவம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151123032037/http://www.jainsamaj.org/rpg_site/literature2.php?id=1027&cat=62. 
  2. Contemporary Indian English Poetry: Comparing Male and Female Voices. Atlantic Publishers & Dist. https://books.google.com/books?id=52GGtEiyPeAC&q=sunita+jain+autobiography&pg=PA8. 
  3. "Certificate". Indian Institute of Technology, Delhi. 28 December 2001 இம் மூலத்தில் இருந்து 23 நவம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151123030953/http://eprint.iitd.ac.in/bitstream/2074/5780/1/TH-2882.pdf. 
  4. Encyclopedia of Post-Colonial Literatures in English. Routledge. https://books.google.com/books?id=nGfMAgAAQBAJ&q=Marie+Sandoz+Prairie+Schooner+Fiction+Award+Sunita+jain&pg=PA725. 
  5. "Padma Awards". Ministry of Home Affairs, Government of India. 2015 இம் மூலத்தில் இருந்து 15 நவம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf. 
  6. Divya Mathura (Ed.) (2003). Aashaa: Hope/faith/trust : Short Stories by Indian Women Writers. Star Publications. பக். 287. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788176500753. https://books.google.com/books?id=gQSwvro50oUC&q=Marie+Sandoz+Prairie+Schooner+Fiction+Award+Sunita+jain&pg=PA261. 
  7. CONTEMPORARY INDIAN SHORT STORIES IN ENGLISH. Sahitya Akademi. 2010. http://www.printsasia.in/book/contemporary-indian-short-stories-in-english-arun-joshi-dina-mehta-khwaja-8172010591-9788172010591. பார்த்த நாள்: 22 November 2015. 
  8. Women's Writing. Sarup & Sons. https://books.google.com/books?id=Ydi9TEQJqD0C&q=Marie+Sandoz+Prairie+Schooner+Fiction+Award+Sunita+jain&pg=PA138. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சுனிதா_ஜெயின்&oldid=18803" இருந்து மீள்விக்கப்பட்டது