சுட்டி விகடன்
Jump to navigation
Jump to search
சுட்டி விகடன் என்பது 1999 முதல் 2019 வரை விகடன் குழுமத்திலிருந்து வெளிவந்த சிறார் இதழாகும்.[1]
இதழாசிரியர் | பாலசுப்ரமணியன்[2] |
---|---|
வகை | சிறார் இதழ் |
இடைவெளி | மாதம் ஒருமுறை (நவம்பர் 1999 - ஏப்ரல் 2005)[3]
மாதம் இருமுறை (ஏப்ரல் 2005 - அக்டோபர் 2019) |
வெளியீட்டாளர் | விகடன் குழுமம் |
முதல் வெளியீடு | நவம்பர் 1999 |
கடைசி வெளியீடு | அக்டோபர் 2019 |
நாடு | தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி (இந்தியா) |
மொழி | தமிழ் |
வலைத்தளம் | www.vikatan.com |
வாசல், ஸ்பெஷல், எஃப்.ஏ. பக்கங்கள், பொது அறிவு, தொடர்கள், புதிரோ புதிர், காமிக்ஸ், விளையாட்டு, கதைகள், நகைச்சுவைத் துணுக்குகள் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. நீதி நெறிக்கதைகள், விஞ்ஞான கட்டுரைகள், வரலாற்று குறிப்புகள் என்று குழந்தைகளுக்காகவே எழுதப்படுகின்றன.
மாணவர்களுக்கு பயன் தரும் எஃப் ஏ பக்கங்கள் ஒவ்வொரு இதழிலும் 16 பக்கங்கள் வெளியிடப்படுகின்றன.
ஒவ்வோர் இதழோடு மாணவர்களே தயாரிக்கும் என் பள்ளி என் சுட்டி இதழ் இணைப்பாக அளிக்கப்படுகிறது.
கடல் பயணங்கள் நூல்
சுட்டி விகடனில் "சென்றதும் வென்றதும்" எனும் தலைப்பில் வெளியான வரலாற்று கட்டுரைகளை கடல் பயணங்கள் எனும் நூலாக வெளியிட்டுள்ளனர். இதன் ஆசிரியர் மருதன். இந்நூலை கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.[4]
மேற்கோள்கள்
- ↑ [வியாபார வியூகங்கள் நூல்- சதீஸ் கிருஷ்ணமூர்த்தி - கிழக்குப் பதிப்பகம் - கோர் காம்பெடன்ஸ் பகுதியில் விகடன் குழுமத்தின் வியாபரா நுணுக்கம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.]
- ↑ http://www.exchange4media.com/news/story.aspx?Section_id=5&News_id=16808[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Correspondent, Vikatan. "இதுவரை சுட்டி..." www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-12-05.
- ↑ [கடல் பயணங்கள் - தினமணி நாளிதழ் - 01st January 2018]