சீனிவாசன் நடராஜன் (ஓவியர்)
சீனிவாசன் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஓர் ஓவியர் மற்றும் கலை இலக்கிய ஆளுமை உடையவர்; கலைமாமணி விருது பெற்றவர். [1][2]
இயற்பெயர்/ அறியும் பெயர் |
சீனிவாசன் நடராஜன் |
---|---|
பிறந்ததிகதி | 1972 சனவரி 24 |
பிறந்தஇடம் | ராஜமன்னார்குடி |
பணி | ஒவியர்,இதழாளர் |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | டிஜிடல் ஒவியம்;புனைவு கதைகள் |
பெற்றோர் | நடராஜன் சந்திரா |
துணைவர் | ஜெயந்தி |
பிள்ளைகள் | அருண்மொழித்தேவன் |
பிறப்பும் படிப்பும்
1972 ஆம் ஆண்டில் பழைய தஞ்சாவூர் ஜில்லா, ராஜமன்னார்குடியில் ஒரு பாரம்பரியம் மிக்க விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சிறுவனாக இருக்கும்போதே ஓவியத்தில் அவருக்கு நாட்டம் இருந்தது. [3]. சென்னை கலை மற்றும் கைவினைக் கல்லூரியில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் புலத்தில் BFA பயின்றார். பொது நிர்வாகத்தில் M.A., M.Phil., பட்டமும் பெற்றுள்ளார். மேலும், திருவாவடுதுறை ஆதீனத்தில் மூன்று வருடங்கள் சைவ சித்தாந்தம் பயின்று, சித்தாந்த ரத்தினம் எனும் பட்டம் பெற்றுள்ளார். அதனால், அவருடைய ஒவியங்கள் சைவ சமய சிந்தனை சார்ந்தவையாக இருக்கின்றன.
பணிகள், விருதுகள்
இவருடைய கலை படைப்புகள் 2016-17 ம் ஆண்டுக்கான மாநில அளவில் மரபு வழி மற்றும் நவீன பாணி கலைக்காட்சி - விருதுக்கு தேர்வு பெற்றுள்ளது. சீனிவாசன் தொடக்கக் காலத்தில் வண்ண ஓவியங்களிலும் கோட்டுச் சித்திரங்களிலும் அழகியலைப் படைத்தார். அவருக்கென்று தனியாக ஒரு பாணி இருந்தது. கணிணி வரைகலை வாயிலாக, டிஜிட்டல் ஒவியங்களாக, அவர் தனது படைப்புகளை உருவாக்கினார். இவர் கலைப் படைப்புகளுக்காகவும், சமூகப் பணிகளுக்காகவும் விருதுகளைப் பெற்றிருக்கிறார். சிறந்த ஒவியருக்காக,அவருக்கு தமிழக அரசின் மிக உயரிய விருதான, கலைமாமணி விருது , 2009 ம் ஆண்டு வழங்கப்பட்டது.[4] நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் (சிறப்பு) விருது, 2004 ம் ஆண்டு வழங்கப்பட்டது. தற்பொழுது, அண்ணா பல்கலை கழகத்தில், கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் துறையில் பணிபுரிகிறார்.[5]
பிற துறை ஈடுபாடு
எழுத்து ஆர்வம் மிக்கவர்.
- இயக்கங்களின் வீழ்ச்சியும் தனிமனித உரையாடல்களின் எழுச்சியும் [1][தொடர்பிழந்த இணைப்பு]
- அஞ்சலி: சிற்பி எஸ்.நந்தகோபால் - இந்தியாவின் சிற்ப முகம் [2]
- நாவல் விடம்பனம் : வண்ணங்களிலிருந்து வார்த்தைகளுக்கு ஒரு பயணம் [3]
- இவர் எழுதிய "விடம்பனம்" - புனைவு நூல், காலச்சுவடு பதிப்பதகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது
- தனது மெய்ப்பொருள் பதிப்பகத்தின் மூலம், இரு தமிழ் கவிதை புத்தகங்கள்(மின் புறா கவிதைகள், Braille-ல் உறையும் நகரம்) பதிப்பித்துள்ளார்.[6] இப்புத்தகங்களை,மேதகு தமிழக ஆளுநர் ரோசையா அவர்கள் 20.12.2014 அன்று வெளியிட்டுள்ளார்.[7]
- தனது சிந்தனைகளை, தொடர்ந்து தமிழில் பதிவு செய்து வருகிறார்.[8]
- மெய்ப்பொருள் எனும் கலை இலக்கியப் பத்திரிகை துவக்கினார்.[9]
- நம்மோடுதான் பேசுகிறார்கள் எனும் நூலை இணை ஆசிரியராக எழுதியுள்ளார்.[10]
- ஐம்பது ஆண்டு பாரம்பரிய மிக்க கணையாழி இதழின் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றி அண்மையில் இணை ஆசிரியராக இருக்கிறார்.[11]
- தமிழ்த் தொலைக்காட்சிகளில், நேர்காணல்களில் கலந்துகொள்கிறார்[12]
சீனிவாசனைப்பற்றிய தமிழ் கட்டுரைகள்
- நிறங்களால் எழுதிய கவிதைகள் – எழுத்தாளர் பாவண்ணண்[13]
- டிஜிட்டல் சித்திரங்கள் - வெங்கட் சாமிநாதன்
- ஒரு புதிய வருகை ஒரு புதிய கலைப்பொருளுடன் - வெங்கட் சாமிநாதன்
- தொன்மங்களை டிஜிட்டல் வழி மீட்டெடுக்கும் கலைஞன் – எழுத்தாளர் ரவி சுப்ரமணியன்
சமூக சிந்தனை
சீனிவாசன், நுண்கலை பல்கலைக்கழகம் தேவை என்ற கட்டுரையை அமுதசுரபி இதழில் 2005 ஆம் ஆண்டு எழுதினார்.[14] 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலைப் பல்கலைக்கழகம்,தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டு, அவருடைய சிந்தனை, உண்மையானது.[15]. அழிந்து வரும் செவ்வியல் மற்றும் தொல்லியல் கலைகளை பாதுகாப்பதற்காக, மூன்று நண்பர்களுடன் இணைந்து கலைகள் பாதுகாப்பு இயக்கம் ஒன்றைத் துவங்கியிருக்கிறார்[16].நாட்டு நலப்பணித்திட்டத்திலும் ஆர்வமுடையவர்[17]
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-09-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130928052123/http://www.artistsrinivasan.com/html/page0001.htm.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924034333/http://www.indianartandartists.com/indian-artist/painter/painter/nsrinivasan/tamil-nadu/chennai/8152.html.
- ↑ https://twitter.com/photoshopug/status/302654339225354241/photo/1
- ↑ http://nganesan.blogspot.in/2009/02/kalaimamani.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2017-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170116144407/https://www.annauniv.edu/ctdt/contents/architecture/architec.html.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2014-12-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141226075826/http://www.tnrajbhavan.gov.in/Speeches/2014/Sp201214.pdf.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2014-12-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141226075832/http://www.tnrajbhavan.gov.in/Events/2014/Events-4.htm.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2017-03-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170331083739/http://www.yaavarum.com/archives/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2014-05-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140529141626/http://www.hindu.com/mp/2005/10/27/stories/2005102701070100.htm.
- ↑ http://www.chennaifirst.in/2013/03/13/collection-of-books-* published-by-vamsi-pathippagam-released/
- ↑ http://www.emagaz.in/catalog/view/Kanaiyazhi_04_2014/Kanaiyazhi042014.html பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் கணையாழி, ஏப்ரல் 2014, 2-ஆம் பக்கத்தில், ஆசிரியர் குழு
- ↑ https://www.youtube.com/watch?v=3zQluamaXEY
- ↑ http://abedheen.files.wordpress.com/2011/10/vasa-pavannan-about-srinivasan.pdf
- ↑ http://unchangedheroes.blogspot.in/p/notice-board.html தேவை நுண்கலை பல்கலைகழகம்
- ↑ http://tamil.oneindia.in/news/tamilnadu/gayathri-is-music-varsity-v-c-187913.html
- ↑ http://www.dinakaran.com/E_Book.asp?id=25&showfrom=8/5/2013&cat=22 பரணிடப்பட்டது 2014-05-07 at the வந்தவழி இயந்திரம். பண்டைய சித்திரங்களின் அழிவு பற்றி வருத்தப்படுகிறார் சீனிவாசன் (தினகரன் வசந்தம் இதழ் - 8 மற்றும் 9 ம் பக்கங்களில்)
- ↑ http://www.annauniv.edu/nss/tsunami_exhibit3.htm பரணிடப்பட்டது 2008-10-10 at the வந்தவழி இயந்திரம். 13.09.2005 இல் அண்ணா பல்கலைக்கழகத்தில், நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் சீனிவாசன் ஒருங்கிணைத்த, 230 பொறியியல் கல்லூரி மாணவர்களின், சுனாமியைப்பற்றிய ஒவிய கண்காட்சி
வெளியிணைப்புகள்
- சீனிவாசனின் படைப்புகள்
- சீனிவாசனின் வலைப்பூ
- கலைமாமணி விருது
- முக நூலில் சீனிவாசன் தனது படைப்புகளை விளக்குகிறார்
- யூரியூப்பில் இவரது நேர்காணல்கள்
- OUTSIDE THE MAINSTREAM - பிரபல கலை விமரிசகர் Anjali Sircar எழுதிய சீனிவாசனைப்பற்றிய கட்டுரை
- Dr.Ashrafi.S.Baghat எழுதிய சீனிவாசனைப்பற்றிய கட்டுரை
- சமயம் என்னை பண்புள்ள மனிதப்பிறவியாக்கியிருக்கிறது - IBN live south India News 2 May 2012-ல் சீனிவாசனின் நேர்காணல்.[தொடர்பிழந்த இணைப்பு]
- சீனிவாசனின் தகவல்கள் பரணிடப்பட்டது 2013-12-25 at the வந்தவழி இயந்திரம்
- ஆனந்த விகடன் நடத்திய தானே ஒவியக்கண்காட்சியில் சீனிவாசனின் ஒவியங்கள் பரணிடப்பட்டது 2014-05-29 at the வந்தவழி இயந்திரம்
- திரு.சீனிவாசன் எழுதிய நம்மோடுதான் பேசுகிறார்கள் - 9.3.2013 - நூல் வெளீயீடு
- ஆபிதீன் பக்கங்களில் ஒவியர் சீனிவாசன்
- ஒவிய கண்காட்சி
- FrontLine September2014 இதழில் ஓவியரின் முகப்பு வடிவமைப்பு
- திரு.சீனிவாசன் எழுதிய நம்மோடுதான் பேசுகிறார்கள் புத்தகம் பற்றி திரு. வெ.சா.
- திரு.சீனிவாசன் எழுதிய நம்மோடுதான் பேசுகிறார்கள் புத்தகம் பற்றி திருமதி. தி. சுபாஷிணி (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை
- திரு.சீனிவாசன் எழுதிய ஓவியம்: வெற்றிடத்தை நீடிக்கச் செய்ய முடியுமா? தி இந்து தமிழ் நாளிதழில்