சி. பி. சிற்றரசு
தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் தலைவர் | |
துவக்கம் | 23 ஏப்ரல் 1970 |
முடிவு | 20 ஏப்ரல் 1976 |
இயற்பெயர்/ அறியும் பெயர் |
சி. பி. சிற்றரசு |
பிறந்ததிகதி | ஏப்ரல் 11, 1906 |
இறப்பு | 16 பெப்ரவரி 1978 | (அகவை 71)
தேசியம் | இந்தியர் |
அரசியல்கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
பெற்றோர் | சி.கே.பெத்தசாமி நாயுடு - இலட்சுமி அம்மாள் |
சி. பி. சிற்றரசு (ஏப்ரல் 11, 1906[1] - பெப்ரவரி 16, 1978[1] ) ஒரு தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் மேடைப் பேச்சாளர். தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் அவைத் தலைவராகப் பணியாற்றியவர்[2]. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகத்திலும் பின்னர் அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் மேடைப் பேச்சாளராகப் புகழ் பெற்றவர். “சிந்தனைச் சிற்பி” என்ற பட்டமும் பெற்றவர்.
சி.பி.சிற்றரசின் இயற்பெயர் சின்னராஜ் . தந்தையின் பெயர் சி.கே.பெத்தசாமி நாயுடு , தாயார் பெயர் இலட்சுமி அம்மாள். இவர்களது சொந்த ஊர் காஞ்சிபுரம் [3][4] . இவர் 1906- ஏப்ரல் 11ஆம் நாள் பிறந்தார்.[1] கு. மு. அண்ணல் தங்கோவின் தாக்கத்தால் தன் பெயரை சிற்றரசு என்று மாற்றிக் கொண்டார். 1930கள் முதல் அண்ணாவுடன் இணைந்து நீதிக்கட்சியில் பணியாற்றத் தொடங்கினார். 1949இல் திமுகவை அண்ணா உருவாக்கிய போது அதில் இணைந்தார்.[5]
குடும்பம்
சி.பி.சிற்றரசுக்கு சரசுவதி என்னும் மகள் இருந்தார்.[6] சரசுவதிக்கும் பி.வரதராசலு நாயுடு என்பவர் மகன் பி.வ.சுதர்சனன் என்பவருக்கும் 6-9-1959ஆம் நாள் சென்னை லாயிட்சு ரோட்டில் கதவெண்-156லிருந்த தென்னிந்த நடிகர்சங்கக் கட்டிடத்தில் கா. ந. அண்ணாதுரை தலைமையில் திருமணம் நடந்தது.[7]
இதழாளர்
- 1952 ஆகஸ்டு 22ஆம் நாள் தீப்பொறி என்னும் வார இதழைத் தொடங்கினார்.[8]
- 1956 மே 3ஆம் நாள் "தீச்சுடர்" என்னும் என்னும் இதழைத் தொடங்கினார்.[9]
- 1959ல் இனமுழக்கம் என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
- திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினராக இருந்த சிற்றரசு, அதன் அதிகாரப்பூர்வ இதழான “நம் நாடு” இன் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
திரைப்படம்
1950களில் ஓராண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்பட நிறுவனத்தில் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றினார்.
நூல்கள்
சிற்றரசு பின்வரும் நூல்களை எழுதியுள்ளார்:
வ.எண் | நூலின் பெயர் | வகை | வெளியான ஆண்டு | பதிப்பகம் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
01 | இரத்த தடாகம் | நாடகம் | ? | ? | |
02 | இலங்கை எதிரொலி | சொற்பொழிவுகள் | 1953 திசம்பர் | தமிழ் மன்றம், தெப்பக்குளம், திருச்சி | |
03 | உலக விஞ்ஞானிகள் | வாழ்க்கை வரலாறு | 1979 ஆகஸ்ட் | பூம்புகார் பிரசுரம், 15, மன்னார்சாமி கோவில் தெரு, சென்னை-108 | 12 அறிவியலாளர்களின் வரலாறு |
04 | உலகை திருத்திய உத்தமர்கள் | வாழ்க்கை வரலாறு | 1979 சூன் | பூம்புகார் பிரசுரம், 15, மன்னார்சாமி கோவில் தெரு, சென்னை-108 | 18 மெய்யிலாளர்களின் வரலாறு |
05 | எமிலி ஜோலா - முதற்பாகம் | கட்டுரைகள் | 1952 மே | தமிழ் மன்றம், தெப்பக்குளம், திருச்சி | |
06 | எமிலி ஜோலா - இரண்டாம் பாகம் | கட்டுரைகள் | 1952 செப்டம்பர் | தமிழ் மன்றம், தெப்பக்குளம், திருச்சி | |
07 | கொலம்பஸ் | வாழ்க்கை வரலாறு | 1952 | திராவிடப்பண்ணை, திருச்சி.[10] | |
08 | சரிந்த சாம்ராஜ்யங்கள் | வரலாறு | 1958 மே | தமிழ் மன்றம், தெப்பக்குளம், திருச்சி | |
09 | சாக்கிய சிம்மன் | ? | 1952 திசம்பர் | திராவிடப்பண்ணை, திருச்சி.[11] | |
10 | சாய்ந்த கோபுரம் | வாழ்க்கை வரலாறு | 1951 நவம்பர் | தமிழ்மன்றம், திருச்சி [12] | மாஜினியின் வாழ்க்கை வரலாறு |
11 | சிந்தனைச் சுடர் | ? | ? | ? | |
12 | சீனத்தின் குரல் | வரலாறு | 1953 மே | தமிழ் மன்றம், தெப்பக்குளம், திருச்சி | |
13 | சுதந்திரத் தந்தை ரூசோ | வரலாறு | ? | ? | |
14 | சேரனாட்டதிபதி | நாடகம் | ? | ? | |
15 | சோகச்சுழல் | கதை}}1951 | இராஜன் பதிப்பகம், மேட்டுப்பாளையம், முசிறி வட்டம், திருச்சி மாவட்டம் | ||
16 | தங்க விலங்கு | நாடகம் | 1951 ஆகத்து | தமிழ்மன்றம், திருச்சி [13] | |
17 | போர்வாள் | நாடகம் | ? | ? | |
18 | மந்திரமுட்டை | ? | ? | ? | |
19 | மதி | நாடகம் | 1951 நவம்பர் | தமிழ்மன்றம், திருச்சி [14] | |
20 | மார்ட்டின் லூதர் | வாழ்க்கை வரலாறு | 1951 செப்டம்பர் | தமிழ்மன்றம், திருச்சி [13] | |
21 | விடுதலை வீரன் | வாழ்க்கை வரலாறு | ? | ? | ஆப்ரகாம் லிங்கன் வரலாறு |
22 | விஷக்கோப்பை | வாழ்க்கை வரலாறு | 1952 | தமிழ்மன்றம், திருச்சி [13] | சாக்ரடீஸ் வரலாறு |
23 | வெங்கலச்சிலை | வாழ்க்கை வரலாறு | 1951 செப்டம்பர் | தமிழ்மன்றம், திருச்சி [13] | லெனின் வரலாறு |
24 | ரோம்நாட்டு வீரன் | வாழ்க்கை வரலாறு | 1958 | முத்துவேல் பதிப்பகம், திருச்சி[15] | |
25 | ஜோதிப்பெண் | ? | ? | ? |
இவைதவிர "புறப்படு மகனே", "பேரனுக்கு" ஆகிய தொடர்களை இனமுழக்கம் இதழிலும் "கபாடபுரம்" என்னும் தொடரை முன்னணி இதழிலும் எழுதியுள்ளார்.[16]
திரைப்படம்
1960ம் ஆண்டு வெளியான ஆட வந்த தெய்வம் படத்துக்கு வசனமும் எழுதியுள்ளார்.
தேர்தல்
1957 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக திருப்பத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.[17] 1962 சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.[18]
சட்ட மேலவைத்தலைவர்
1964ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970-04-23 முதல் 1976-04-20ஆம் நாள் வரை அந்த அவையின் தலைவராகப் பணியாற்றினார்.[1]
வெளிநாட்டுப்பயணம்
1970 அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் நாடுகளின் 16ஆவது மாநாடு நடைபெற்றது; அதில் தமிழ்நாட்டின் சார்பில் சிற்றரசு கலந்துகொண்டார்.[1]
அ.தி.மு.க.வில்
1976ல் மு. கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுக வில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
மரணம்
1978-பிப்ரவரி-16ஆம் நாள் நோய்வாய்பட்டு மரணமடைந்தார்.
நினைவேந்தல்
1989ல் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.
சான்றடைவு
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 தமிழரசு 01-03-1978, பக்.48
- ↑ விஜயாபானு, ed. (1972). ஜாதிப்பூ. ஏகம்மை நிலையம்.
- ↑ க. திருநாவுக்கரசு, ed. (1999). திராவிட இயக்கத் தூண்கள். நக்கீரன் பதிப்பகம். p. 157.
சி.பி.சிற்றாசின் இயற்பெயர் ' சின்னராஜ் தந்தையின் பெயர் பெத்தசாமி நாயுடு; தாயார் பெயர் இலட்சுமி அம்மாள் இவர்களது சொந்த ஊர் காஞ்சிபுரம்
- ↑ Tamil Nadu (India). Legislature. Legislative Council, ed. (1972). Who is who, Volume 7. Legislative Council Departmen. p. 21.
- ↑ திராவிட இயக்கத் தூண்கள் - க. திருநாவுக்கரசு; நக்கீரன் பதிப்பகம்; பக் 155-167
- ↑ இனமுழக்கம், 14.10.60, பக்கம் 2
- ↑ தென்னகம்; 4-9-1959; பக்.2
- ↑ திராவிடநாடு (இதழ்) நாள்:13-7-1952, பக்கம் 6
- ↑ திராவிடநாடு (இதழ்) நாள்:15-4-1956, பக்கம் 10
- ↑ திராவிடநாடு (இதழ்) நாள்:6-7-1952, பக்கம் 12
- ↑ திராவிடநாடு (இதழ்) நாள்:22-12-1952, பக்கம் 2
- ↑ திராவிடநாடு (இதழ்) நாள்:9-9-1951, பக்கம் 5
- ↑ 13.0 13.1 13.2 13.3 திராவிடநாடு (இதழ்) நாள்:19-8-1951, பக்கம் 5
- ↑ திராவிடநாடு (இதழ்) நாள்:4-11-1951, பக்கம் 10
- ↑ திராவிடநாடு (இதழ்) நாள்:31-8-1958, பக்கம் 4
- ↑ இனமுழக்கம், 27-1-1961, பக்.6
- ↑ Volume I, 1957 Indian general election, 2nd Lok Sabha
- ↑ "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2011-08-22.
வெளி இணைப்பு