சி. தியாகராசர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சி. தியாகராசச் செட்டியார் என்னும் தமிழறிஞர் கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்தவர்.[1]

பிறப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம், பூவாளூரில் 1826 ஆம் ஆண்டில் சிதம்பரம் செட்டியார் என்பவருக்கு மகனாகப் பிறந்தார்.

கல்வி

தியாகராசர் திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்றில் எண்ணையும் எழுத்தையும் தொடக்கக் கல்வியாகப் பெற்றார். பின்னர் தனது ஊருக்கு அருகில் வாழ்ந்த தமிழறிஞர்களிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார்.

1844 ஆம் ஆண்டில் மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் மாணவராகச் சேர்ந்து இலக்கியமும் இலக்கணமும் பயின்றார்.

பணி

தமிழிலக்கியத்தில் போதிய பயிற்சி பெற்றதும் மீனாட்சி சுந்தரனாரிடமே ஓலை எழுதுவோராகவும் மாணவர்களுக்குத் தொடக்கப் பாடங்களைக் கற்பிக்கும் சட்டாம்பிள்ளையாகவும் பணியாற்றினார்.[2]

1865 ஆம் ஆண்டில் கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். அக்கல்லூரியில் உ. வே. சாமிநாதையருக்கு தமிழாசிரியர் பணியைப் பெற்றுத் தந்தார். பனைவோலை எழுதுவதிலும் இலக்கணத்தைக் கற்பிப்பதிலும் விற்பனராகத் திகழ்ந்தார். 1888 ஆம் ஆண்டில் மறைந்தார். [3]

மறைவு

சி. தியாகராச செட்டியார் 1888 சனவரி 19 ஆம் நாள் மரணமடைந்தார்.

வாழ்க்கை வரலாறு

இவருடைய வாழ்க்கை வரலாற்றை வித்துவான் தியாகராச செட்டியார் என்னும் தலைப்பில் உ. வே. சாமிநாதையர் நூலாக எழுதியுள்ளார்.


சான்றடைவு

"https://tamilar.wiki/index.php?title=சி._தியாகராசர்&oldid=27717" இருந்து மீள்விக்கப்பட்டது