1865
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1865 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1865 MDCCCLXV |
திருவள்ளுவர் ஆண்டு | 1896 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2618 |
அர்மீனிய நாட்காட்டி | 1314 ԹՎ ՌՅԺԴ |
சீன நாட்காட்டி | 4561-4562 |
எபிரேய நாட்காட்டி | 5624-5625 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1920-1921 1787-1788 4966-4967 |
இரானிய நாட்காட்டி | 1243-1244 |
இசுலாமிய நாட்காட்டி | 1281 – 1282 |
சப்பானிய நாட்காட்டி | Genji 2Keiō 1 (慶応元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2115 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4198 |
1865 (MDCCCLXV) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
- மார்ச் - இலங்கையின் உதவி ஆளுநராக சேர் ஹேர்க்குலெஸ் ரொபின்சன் பதவியேற்றார்.
- ஏப்ரல் 9 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ரொபேர்ட் லீ தனது 26,765 பேருடனான படைகளுடன் வேர்ஜீனியாவில் சரணடைந்தார்.
- ஏப்ரல் 14 - ஆபிரகாம் லிங்கன் வாஷிங்டன், டிசியில் சுடப்பட்டார்.
- ஏப்ரல் 27 - 2,300 பயணிகளுடன் சென்ற சுல்தானா என்ற நீராவிக்கப்பல் மிசிசிப்பி ஆற்றில் மூழ்கியதில் 1,700 பேர் கொல்லப்பட்டனர்.
- மே 5 - ஜெபர்சன் டேவிஸ் கடைசித் தடவையாக தனது 14 அமைச்சரவை உறுப்பினர்களை ஜோர்ஜியாவில் சந்தித்தார். கூட்டமைப்பு அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டது.
- மே 10 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜெபர்சன் டேவிஸ் கூட்டணிப் படைகளால் கைப்பற்றப்பட்டார்.
- மே 17 - அனைத்துலகத் தொலைத் தொடர்பு மையம் ( International Telegraph Union) ஏற்படுத்தப்பட்டது. இது பின்னர் அனைத்துலகத் தொலைத்தகவல் தொடர்பு மையம் (International Telecommunication Union) எனப் பெயர் மாற்றம் பெற்றது.
- மே 23 - வாஷிங்டன், டிசியில் அமெரிக்க உள்நாட்டுப் போர்]] முடிவுற்றமை கொண்டாடப்பட்டது.
- ஜூலை 4 - ஆலிஸின் அற்புத உலகம் நூல் வெளியிடப்பட்டது.
- ஜூலை 7 - ஆபிரகாம் லிங்கன் கொலையில் குற்றவாளிகளான நான்கு பேர் தூக்கிலிடப்பட்டனர்.
- நவம்பர் 11 - டீஸ்ட்டா ஆற்றின் கிழக்குப் பகுதிகளை பூட்டான் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்குக் கொடுத்தது.
- டிசம்பர் 24 - அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுற்றபின் அப்போதைய ஜனாதிபதி ஆன்ட்ரூ ஜாக்சன் கருப்பினத்திவர்களுக்கு சுதந்திரம் கொடுப்பதென முடிவுசெய்தார். அதனை எதிர்த்து கருப்பினத்தவர்களைக் கொலை செய்ய கு கிளக்சு கிளான் என்ற அமைப்பை அமெரிக்க வெள்ளையர்கள் ரகசியமாக உருவாக்கினர்.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
பிறப்புகள்
- ஜனவரி 28 - பால கங்காதர திலகர் இந்திய சுதந்திர போராட்டவீரர்
- மே 28 - மைசூர் வாசுதேவாச்சாரியார், கருநாடக இசைப் பாடகர் (இ. 1961)
இறப்புகள்
- ஏப்ரல் 15 - ஆபிரகாம் லிங்கன், அமெரிக்காவின் 16வது அரசுத்தலைவர் (பி. 1809)