சி. தன்னாசி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சி. தன்னாசி
இயற்பெயர்/
அறியும் பெயர்
சி. தன்னாசி
பிறந்ததிகதி ஏப்ரல் 4 1943
அறியப்படுவது எழுத்தாளர்


சி. தன்னாசி (பிறப்பு: ஏப்ரல் 4 1943) மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவார். சிமா. இளங்கோ எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் ஒரு வியாபாரியும் கூட.

எழுத்துத் துறை ஈடுபாடு

1958 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்

  • "இளங்கோ கவிதைகள்";
  • "பயணங்கள் பாதைக்காக அல்ல" (புதுக் கவிதைகள்);
  • "மருதி" (காவியம்);
  • "போர்ட் டிக்சன் மகாமாரியம்மன் புகழாஞ்சலிப் பூக்கள்";
  • "கவிமணியின் கவியரங்கக் கவிதைகள்";

சிறுகதைத் தொகுப்பு

  • "ஒரு தாய் சாபம் பெறுகிறாள்"

கட்டுரைத் தொகுப்பு

  • "கண்ணதாசன் கவிதைகள்: சொல்லும் சுவையும்"

பரிசில்களும், விருதுகளும்

  • சுவாமி இராமதாசர் அவர்களிடமிருந்து "கவிமணி" விருது (1981);
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பணமுடிப்பும் சான்றிதழும் (1984);
  • தமிழ் நாடு வி.ஜி.பி. சந்தனம்மாள் அறக்கட்டளை விருது (1988);
  • பாரதிதாசன் நூற்றாண்டு விழா காவியப் போட்டியில் முதல் பரிசு (1992);
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சீ.வி. குப்புசாமி விருது (1991)

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=சி._தன்னாசி&oldid=6238" இருந்து மீள்விக்கப்பட்டது