சி. ஆ. ராமசாமிபிள்ளை
சி. ஆ. ராமசாமிபிள்ளை (1898-1968) தமிழ்நாட்டில் இராஜபாளையம்-சங்கரன்கோவில் சாலையில் உள்ள கரிவலம்வந்தநல்லூரைச் சேர்ந்தவர்.
பிறப்பு
இவர் 1898ஆம் ஆண்டு ஆடி மாதம் 14ஆம் தேதி பிறந்தவர். தான் செய்துவந்த பஞ்சு வியாபாரம் சரியாக நடைபெறாமல் வறுமையில் வாடியநிலையிலும் தமிழ் இலக்கியத்தில் கொண்ட ஈடுபாட்டால் பல சிறு பிரபந்த நூல்களைப் படைத்துள்ளார். தமிழ் இலக்கிய இலக்கணங்களை சேத்தூர் அரசவைக் கவிஞர் அப்பாவுக் கவிராயரிடம் கற்றவர். [1]
இயற்றிய நூல்கள்
கரிவலம்வந்தநல்லூர் கோயில் பால்வண்ணநாதர் மீது அந்தாதி, கலிவெண்பா, மாலை முதலிய பிரபந்த நூல்களை இயற்றியுள்ளார்[1].
- திருக்கருவை முகலிங்க வெண்பா அந்தாதி
- திருக்கருவை பால்வண்ணத்தந்தாதி
- திருக்கருவை நீரோட்டக வெண்பா அந்தாதி
- கருவை நாயகமாலை
- திருக்கருவை வருக்கமாலை
- திருக்கருவை இரட்டை மணிமாலை
- திருக்கருவை பால்வண்ணப்பத்து
- திருக்கருவை ஒப்பனையம்மன் வருகைப்பத்து
- திருக்கருவை ஒப்பிலா வல்லியம்மன் பத்து
- திருக்கருவை முப்பிடாதியம்மன் பத்து
- திருக்கருவை வீரசண்முகர் வருக்கச் சமயமாலை
- திருக்கருவை வீரசண்முகர் வாழ்த்துப் பாமாலை
- திருக்கருவை தலபுராண போற்றிக் கலிவெண்பா
இறப்பு
இவர் 1968-ஆம் ஆண்டு தம் 70ஆவது வயதில் காலமானார்.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 அறியப்படாத அற்புதக் கவிஞர் , கொ.மா.கோதண்டம், தினமணி, தமிழ்மணி, 15.2.2015