சிவாகமக் கச்சிமாலை
Jump to navigation
Jump to search
சிவாகமக் கச்சிமாலை என்னும் நூல் சிவஞான வள்ளல் என்பவர் இயற்றிய 20 நூல்களில் ஒன்று. இது 100 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைக் கொண்ட நூல். இந்த நூலின் காலம் 15ஆம் நூற்றாண்டு. இதில் உள்ள எல்லாப் பாடல்களும் ‘கச்சி ஏகம்பனே’ என முடிகின்றன. இதன் உள்நோக்கம் சிவ ஆகமங்களை விளக்குதல்.
ஆகமம் என்பது ஆ கமம் என்னும் இரு தமிழ்ச் சொற்களின் புணர்நிலைத் தொடர். ஆ என்பது ஆன்மா. சைவ சித்தாந்தத்தில் இது பசு எனக் கூறப்படும். கமம் எனும் சொல் நிறைவு என்னும் பொருளைத் தரும். தொல்காப்பியம், உரியியல் நூற்பா 58 உயிர் சிவத்தோடு ஒன்றி நிறைவு பெறுதலை உணர்த்தும் தமிழ்ச்சொல் தொடர் ஆகமம்.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005