சிவகங்கை இராசேந்திரன்
சிவகங்கை இராசேந்திரன் (1947-1965[1]) என்று அறியப்படும் மு. இராசேந்திரன் இந்தியாவில் நடுவண் அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல்மொழி சட்டம், 1963ஐ அமல் படுத்துவதை எதிர்த்து, தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிப்புப் போராட்டத்தின்போது, போராடி துப்பாக்கி சூட்டில் உயிர்விட்ட போராளி ஆவார்.
வாழ்க்கை
இவர் காரைக்குடிக்கு அருகிலுள்ள கல்லல் என்ற ஊரைச் சேர்ந்தவர். காவல் துறையில் பணியாற்றிய முத்து குமார் பிள்ளைக்கும், வள்ளிமயிலுக்கும் ஜூலை 16, 1947இல் பிறந்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி மாணவனாகச் சேர்ந்து பயின்று வந்தார் [2]
இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டம்
26 ஜனவரி 1965 முதல் இந்தி மட்டுமே ஆட்சி மொழி எனும் சட்டத்தை நிறைவேற்ற, நடுவணரசு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தயாராகி வந்தது. முன்னறிவிப்புகளும் வந்தன. இதை உணர்ந்த மாணவர்களும் பொதுமக்களும் கிளர்ந்தனர், விருதுநகர் சீனிவாசன், காளிமுத்து, நா.காமராசன் ஆகியோரும் இன்னும் சில மாணவர் தலைவர்கள் இப்போராட்டத்தை வடிவமைத்து நடத்தினார்கள் [3]
துப்பாக்கிச் சூடு
1965 சனவரி 27ஆம் நாள் இந்தி மட்டுமே ஆட்சி மொழிச் சட்டத்தை நிறைவேற்றுவதை எதிர்தது, அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் ஊர்வலம் நடத்தினர். அந்த ஊர்வலத்தில் ஆவேசமாசமாக முழக்கமிட்டு சென்றார் இராசேந்திரன். அடக்கு முறையின் ஒரு பகுதியாக நடந்த காவல் துறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இராசேந்திரன பலியானார். அவரின் உடல் சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் அடக்கம் செய்யப்பட்டது. அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களால் இராசேந்திரனக்கு சிலை வைக்கப்பட்டது.[4]
குறிப்புகள்
- ↑ "ஏன் மொழிப் போராளிகளை நாம் நினைவுகூர வேண்டும்?" (in ta). https://www.hindutamil.in/news/opinion/columns/30296-.html.
- ↑ தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம் 14
- ↑ தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம்12
- ↑ தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம்,பக்கம்15