சிலேடைப் பாடல்
Jump to navigation
Jump to search
ஒரே பாடல் இருவேறு விதமான பொருள் தரும்படி அமைத்துப் பாடுவது சிலேடை அணி அல்லது இரட்டுற மொழிதல் எனப்படுகிறது. இந்த சிலேடை அணியில் அமைந்த பாடல்களை சிலேடைப் பாடல்கள் என்கின்றனர். காளமேகப் புலவர் பல சிலேடைப் பாடல்களை இயற்றி இருக்கிறார்.
எடுத்துக்காட்டுகள்
ஆடிக்குடத்தடையும்
- ஆடிக்குடத்தடையும், ஆடும்போதே இரையும்
- மூடித்திறக்கின் முகங்காட்டும் - ஓடி மண்டை
- பற்றிற் பரபரெனும் பாரிற் பிண்ணாக்கு முண்டாம்
- உற்றிடும் பாம்பெள்ளெனவே ஓது
என்கிற மேற்காணும் காளமேகப் புலவர் பாடல் பாம்புக்கும் எள்ளுக்கும் சிலேடையாக அமைந்துள்ளது.
வெங்காயம் சுக்கானால்
- வெங்காயம் சுக்கானால்
- வெந்தயத்தால் ஆவதென்ன
- இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை
- மங்காத, சீரகத்தை தந்தீரேல்
- வேண்டேன் பெருங்காயம்
- வேரகத்துச் செட்டியாரே
என்கிற பாடல் சமையலறைப் சரக்குப் பொருட்களைக் குறிப்பதுடன், உடல், உயிர் என்பவற்றை உள்ளடக்கிய ஓர் ஆன்மீகக் கருத்தை தரும் பாடலாக அமைகிறது.
நஞ்சிருக்கும் தோலுரிக்கும்
- நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதன் முடிமேலிருக்கும்
- வெஞ்சினத்துப் பற்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த்
- தேம்பாயுஞ் சோலைத் திருமலைராயன் வரையில்
- பாம்பாகும் வாழைப்பழம்
என்கிற காளமேகப் புலவரின் பாடல் பாம்பிற்கும் வாழைப்பழத்திற்கும் சிலேடையாக அமைக்கப்பட்டிருக்கிறது.