சின்னப்பூ

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சின்னப்பூ என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும் வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் அழைக்கப்படும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். மலை, ஆறு, நாடு, ஊர், மாலை, யானைப்படை, குதிரைப்படை, கொடி, முரசு, செங்கோல் எனும் அரசுக்கு உரிய பத்து உறுப்புக்களாகும் அவற்றின் சிறப்புத் தோன்ற நுறு, தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது பாடல்களால் பாடுவது சின்னப்பூ ஆகும்[1]. சின்னப்பூ சிற்றிலக்கியம் அரசர்களைப் பாடுவதற்கே உகந்தது[2].

வேந்தருடைய சின்னங்களைப் பற்றிய சிற்றிலக்கியம் ஆதலால் இது சின்னப்பூ எனப் பெயர் பெற்றது. இதே கருப்பொருளைக் கொண்டு பத்துப் பாடல்களில் பாடப்படும் சிற்றிலக்கியம் தசாங்கப்பத்து எனப்படும்.

குறிப்புகள்

  1. நவநீதப் பாட்டியல், பாடல் 40
  2. எஸ். கலியாண சுந்தரையர், எஸ். ஜி. கணபதி ஐயர் ஆகியோரது நவநீதப் பாட்டியல் பதிப்பில், 40 ஆம் பாடலின் விளக்கத்துக்கு முள்ளியார் கவித்தொகையில் இருந்து மேற்கோள்.

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=சின்னப்பூ&oldid=16817" இருந்து மீள்விக்கப்பட்டது