சினேந்திரமாலை
Jump to navigation
Jump to search
சினேந்திர மாலை என்பது ஒரு சமண நூல். உபேந்திர ஆசாரியர் என்னும் சமண முனிவர் இதன் ஆசிரியர். [1] சிலப்பதிகாரம் அருபதவுரை இந்த நூலின் பாடல் ஒன்றை மேற்கோளாகத் தருவதால் இந்த நூலின் காலம் 10 ஆம் நூற்றாண்டு எனக் கொள்கின்றனர்.
சினேந்திரன் – அருகன். எண்வகைக் கன்மங்களையும் சயித்தவன் – என்னும் விளக்கத்தைச் சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார் உரை குறிப்பிடுகிறது.
இந்த நூல் பாயிரப் பகுதியில் உள்ள 9 பாடல்களையும் சேர்த்து 464 வெண்பாக்களைக் கொண்டது. 23 காண்டங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.
நூல் சொல்லும் செய்திகளில் சில
- கோள்களின் உதயம், நட்பு, பகை, திக்கு, பால், வடிவு முதலான செய்திகள் 80 பாடல்களில் சொல்லப்பட்டுள்ளன.
- ஆருடச் சக்கரம் 6 பாடல்களில் கூறப்பட்டுள்ளது.
- ”மூதுணர்ந்தோர் நூலின் முறை தெரிந்து யான் எடுத்துரைக்கிறேன்” எனக் கூறிக்கொண்டு இவர் குறிப்பிடும் செய்திகளில் சில. தாது-மூலம், சீவன், புதைபொருள் காணும் வழி, நலந்தீங்கு, பிணி, மரணம், உண்டி, கனா, குணம், மங்கலம், காமம், மகப்பேறு, சரிகை, சல்லியம், மழைவரவு முதலானவை.
- இந்த நூலின் ஆறு ஆருடப் பாடல்களுக்கு எழுதப்பட்டுள்ள உரையில் 104 சக்கரங்கள் காட்டப்பட்டுள்ளன.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
அடிக்குறிப்பு
- ↑ “உபேந்திராசாரியார் என்னும் சைன மாமுனிவர் செய்தருளிய சினேந்திரமாலை மூலமும் உரையும் தஞ்சை தி. சாமிநாத சோதிடர் பார்வை” என்னும் குறிப்புடன் சென்னை இரத்தினநாயகர் வெளியீடாக இந்நூல் பலமுறை வெளிவந்துள்ளது.