சித்தரந்தாதி
Jump to navigation
Jump to search
சித்தரந்தாதி 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல். 22 கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் கொண்ட சிறு நூல். இது உரையுடன் வெளிவந்துள்ளது. உரையாசிரியர் இதனைச் சித்தர் பாடியதாகக் குறிப்பிட்டுள்ளார். பாடல்கள் நல்ல நடையில் உள்ளன. இதனை இயற்றியவர் இன்னார் எனத் தெரியவில்லை.
இந்த நூல் அபிராமி அந்தாதி நூலுக்குக் காலத்தால் பிற்பட்டது.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005