சிங்களவர் சமையல்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழர் சமையல் போன்றே சிங்களவர் சமையலும் சோறும் கறிகளையும் முதன்மையாக கொண்ட, கடலுணவு வகைகளையும், சுவைப்பொருட்களையும் அதிகம் பயன்படுத்தும் ஒரு தனித்துவமான சமையல் ஆகும். ஆப்ப (அப்பம்), கிரிபத் (பால் சோறு), கெவுங் (பணியாரம்), மாலுமிரிஸ்(கறிமிளகாய், மாலு=கறி, மிரிஸ்=மிளகாய்), கொத்து ரொட்டி, பிட்டு, இடியப்ப (இடியப்பம்), சவ் கந்த (பாயசம்), முங்கற்ர கந்த (பயத்தங் கஞ்சி), கட்ட சம்பல் (தேங்காய்பூச் சேர்க்காத சம்பல் - தேங்காய் பூச் சேர்தால் விரைவில் பழுதடைந்துவிடுவதால் தேங்காய் பூ இல்லாமல் தயாரிக்கப்படுகின்றது), சீனி சம்பல், பருப்புவ (பருப்பு கறி), தெல் தாப்பு அள (எண்ணெயில் வதக்கி எடுத்த உருளைக் கிழங்கு), பாண், ரொடி (கள்ளு) ஆகியவை சிங்கள உணவு வகைகளில் முக்கிய சில.