சவானி அன்பழகன்
சவானி அன்பழகன் (Savani Anbalagan, பிறப்பு: 9 பெப்ரவரி 1987, சென்னை) மூலக்கூற்று உயிரியல், விருத்தியாக்க உயிரியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஓர் இந்தியத் தமிழ் அறிவியலாளர். இவர் போலந்தின் போசுனானில் உள்ள ஆடம் மிக்கேவிச் பல்கலைக்கழகத்தில் உள்ள உயிரியல் பீடத்தின் மூலக்கூற்று உயிரியல் மற்றும் உயிரித் தொழில்நுட்ப நிறுவனத்தில் முதன்மை ஆய்வாளராக உள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
அன்பழகன் 2009 இல் தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் வேதியியல் மற்றும் உயிரித் தொழில்நுட்பப் பள்ளியில் உயிரித் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 2009 முதல் 2012 வரை மிலனில் உள்ள மிலானோ-பிக்கோக்கா பல்கலைக்கழகத்தில் மதுவம் (Saccharomyces cerevisiae) மரபியல் துறையில் முனைவர் பட்டப்படிப்பை மேற்கொண்டார். அவரது முனைவர் பட்ட மேற்பார்வையாளர் பேராசிரியர் மரியா பியா லாங்கீஸ் மற்றும் அவரது ஆராய்ச்சி முனைக்கூறு டி. என். ஏ. பாதுகாப்பின் மரபணு வழிமுறைகளில் கவனம் செலுத்தியது.[1] அன்பழகன் இஸ்ரேலில் உள்ள வைசுமன் அறிவியல் கழகத்தில் மூலக்கூறு உயிரணு உயிரியல் துறையில் கில் லெவ்கோவிட்ஸ் ஆய்வகத்தில் முனைவர் பட்ட மேலாய்வாளர் பட்டப்படிப்பை முடித்தார்.[2][3] அவரது ஆராய்ச்சி வரிக்குதிரை மீன் உட்புற பிட்யூட்டரி வளர்ச்சியின் அடிப்படையிலான மூலக்கூற்று மரபியல் மீது கவனம் செலுத்தியது.[4][5] 2020 ஆம் ஆண்டில், போஸ்னானில் உள்ள ஆடம் மிக்கிவிச் பல்கலைக்கழகத்தில் உயிரியல் ஆய்வு மையத்தில் அன்பழகன் சேர்ந்தார், மேலும் இவரது ஆய்விற்கு போலந்தின் தேசிய அறிவியல் மையம் நிதி வழங்கியுள்ளது.[6][7][8]
குறிப்பிடத்தக்க ஆராய்ச்சி விருதுகள்
அன்பழகன் தனது முனைவர் பட்டப் படிப்பின் போது, ஐரோப்பிய ஒன்றியம் மேரி ஸ்கோடோவ்ஸ்கா-கியூரி உதவித்தொகை பெற்றவர்.[9] அன்பழகனுக்கு முனைவர் பட்ட மேலாய்வாளர் உயர்கல்விக்கான இஸ்ரேல் சபையின் VATAT (ஹீப்ரு சுருக்கம் הוועדה לתכנון ותקצוב Va'adat Tichnun VeTiktzuv) மற்றும் வைசுமன் அறிவியல் கழகத்தில் வழங்கும் கோஷ்லாண்ட் உதவித்தொகையும் வழங்கப்பட்டது.[10][11]
முக்கிய அறிவியல் சாதனைகள்
அன்பழகன் உயிரியலில் பல்வேறு புதிய கருத்துகளை முன்மொழிந்தார், அதில் வாயுஏற்பி (gasoreceptors), வாயுகிரைன் சிக்னலிங் (gasocrine signaling), கேசோக்ரினாலஜி (gasocrinology), நீர்ஏற்பி (aquareceptors), இரைபோஏற்பி (riboceptors), அக்னிஏற்பி (agnireceptors) மற்றும் தெர்மோகிரைன் சிக்னலிங் (thermocrine signaling) ஆகியவை அடங்கும்.[12][13][14][15] அவரது கருத்துக்கள் உயிரிலிவழிப்பிறப்பை புரிந்துகொள்ள உதவும். இந்த கருத்துக்கள் அமெரிக்க உடலியல் சங்கம் மற்றும் போலந்து உயிர்வேதியியல் சங்கம் உள்ளிட்ட அறிவியல் சங்கங்களின் ஆய்விதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன.[16][17][18][19] வாயுஏற்பிகள் பற்றிய அவரது முன்மொழிவு மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு 2019 கண்டுபிடிப்பை சவால் செய்துள்ளது.[20] மதுவம் சாக்கரோமைசஸ் செரிவிசியாவில் உள்ள முனைக்கூறு பாதுகாப்பு புரத-குறியீட்டு மரபணுக்களில் செயற்கை மரணத்தை (synthetic lethality) அடையாளம் காண்பது, வரிக்குதிரை மீன் கருக்களில் உட்புற பிட்யூட்டரி வளர்ச்சியின் மரபியல் மற்றும் வரிக்குதிரை மீன் ஏற்பிணைப்பி-ஏற்பி தொகுப்பு உருவாக்குவது ஆகியவை அவரது மற்ற அறிவியல் சாதனைகளில் அடங்கும்.[21][22]
மேற்கோள்கள்
- ↑ "Role of saccharomyces cerevisiae Rif1 and Rif2 proteins in protection of telomeres". https://boa.unimib.it/handle/10281/43717.
- ↑ "Group | The Levkowitz Lab". https://www.weizmann.ac.il/mcb/levkowitz/group.
- ↑ "The 67th General Meeting of the International Board | WeizmannCompass". https://www.weizmann.ac.il/WeizmannCompass/sections/special-events/the-67th-general-meeting-of-the-international-board.
- ↑ "Where the Blood-Brain Barrier Breaks Down - Weizmann Wonder Wander - News, Features and Discoveries" (in en). 2019-01-07. https://wis-wander.weizmann.ac.il/life-sciences/where-blood-brain-barrier-breaks-down.
- ↑ "Loaded with Love – and Other Signals - Weizmann Wonder Wander - News, Features and Discoveries" (in en). 2019-07-29. https://wis-wander.weizmann.ac.il/life-sciences/loaded-love-%E2%80%93-and-other-signals.
- ↑ "Savani Anbalagan | Institute of Molecular Biology and Biotechnology". https://ibmib.web.amu.edu.pl/groups/zebrafish-developmental-neurobiology/savani-anbalagan/.
- ↑ "Znamy wyniki konkursów OPUS 22 i SONATA 17". https://uniwersyteckie.pl/nauka/znamy-wyniki-konkursow-opus-22-i-sonata-17.
- ↑ "News from the Zebrafish Community | IZFS - International Zebrafish Society". https://www.izfs.org/newssplash/newssplash-issue-9-spring-2021/member-news.
- ↑ "High Resolution Microscopy in the DNA Damage Response | IMAGE DDR Project | Fact Sheet | FP7" (in en). https://cordis.europa.eu/project/id/215148.
- ↑ "Council for Higher Education & Israel Academy of Science & Humanities Excellence Fellowship Program for International Postdoctoral Researchers" (in en-US). 2020-10-12. https://che.org.il/en/council-higher-education-israel-academy-science-humanities-excellence-fellowship-program-international-postdoctoral-researchers-call-applications/.
- ↑ "Postdoctoral Fellowships | Feinberg Graduate School" (in en). 2015-04-01. https://www.weizmann.ac.il/feinberg/fellowship-aid/postdoctoral-fellows.
- ↑ "Dr. Savani Anbalagan from the Adam Mickiewicz University, Poland." (in en). https://www.uib.no/en/michaelsarscentre/168877/dr-savani-anbalagan-adam-mickiewicz-university-poland.
- ↑ "Inicjatywa Doskonałości - Uczelnia Badawcza: Doktor Savani Anbalagan – wykład otwarty". https://uczelnia-badawcza.gumed.edu.pl/77884.html.
- ↑ "ORCID". https://orcid.org/0000-0003-4839-9439.
- ↑ Uniwersytet im. Adama Mickiewicza w Poznaniu, Administrator strony (2024-04-30). "Dr Savani Anbalagan kwestionuje odkrycie nagrodzone Noblem - Uniwersytet im. Adama Mickiewicza w Poznaniu". https://amu.edu.pl/nauka/popularyzacja-nauki-2/artykuly-popularyzacja-nauki/dr-savani-anbalagan-kwestionuje-odkrycie-nagrodzone-noblem.
- ↑ Anbalagan, Savani (2024-02-01). "Heme-based oxygen gasoreceptors". American Journal of Physiology. Endocrinology and Metabolism 326 (2): E178–E181. doi:10.1152/ajpendo.00004.2024. பன்னாட்டுத் தர தொடர் எண்:1522-1555. பப்மெட்:38231000. https://pubmed.ncbi.nlm.nih.gov/38231000/.
- ↑ "Strona główna". https://ptbioch.edu.pl/.
- ↑ Anbalagan, Savani (31 December 2024). "Gas-sensing riboceptors". RNA Biology 21 (1): 1–6. doi:10.1080/15476286.2024.2379607. பப்மெட்:39016047.
- ↑ Anbalagan, Savani (31 December 2024). "Temperature-sensing riboceptors". RNA Biology 21 (1): 1–6. doi:10.1080/15476286.2024.2379118. பப்மெட்:39016038.
- ↑ Adam Mickiewicz University (21 May 2024). "Dr Savani Anbalagan challenges Nobel Prize-winning discovery! - Adam Mickiewicz University, Poznań, Poland" (in en). https://amu.edu.pl/en/news-and-events/news/dr-savani-anbalagan-challenges-nobel-prize-winning-discovery!. பார்த்த நாள்: 8 July 2024.
- ↑ Gobbini, Elisa; Trovesi, Camilla; Cassani, Corinne; Longhese, Maria Pia (2014-07-28). "Telomere uncapping at the crossroad between cell cycle arrest and carcinogenesis". Molecular & Cellular Oncology 1 (1): e29901. doi:10.4161/mco.29901. பன்னாட்டுத் தர தொடர் எண்:2372-3548. பப்மெட்:27308311. பப்மெட் சென்ட்ரல்:4905175. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4905175/.
- ↑ "Savani Anbalagan – Understand and describe life 2023". https://life2023.ichb.pl/en/keynote-speakers/savani-anbalagan/.