சரோஜினி யோகேஸ்வரன்
சரோஜினி யோகேஸ்வரன் (இறப்பு: 17 மே 1998) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வெ. யோகேஸ்வரனின் மனைவியும் ஆவார்.
சரோஜினி யோகேஸ்வரன் | |
---|---|
யாழ்ப்பாண நகர முதல்வர் | |
பதவியில் 1998–1998 | |
பின்னவர் | பொன். சிவபாலன் |
யாழ்ப்பாண நகரசபை உறுப்பினர் | |
பதவியில் 1998–1998 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
இறப்பு | யாழ்ப்பாணம், இலங்கை | மே 17, 1998
அரசியல் கட்சி | தமிழர் விடுதலைக் கூட்டணி |
துணைவர் | வெ. யோகேசுவரன் |
முன்னாள் கல்லூரி | வேம்படி மகளிர் கல்லூரி |
அரசியலில்
1997 ஆம் ஆண்டில் இவர் யாழ்ப்பாண நகர முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 14 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக நகர முதல்வராகப் பொறுப்பேற்றவர் இவரே.
படுகொலை
திருமதி யோகேஸ்வரன் 1998 மே 17 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் ஐந்து முறை துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் மரணமானார். விடுதலைப் புலிகளின் ஒரு பிரிவாகக் கருதப்படும் சங்கிலியன் படை என அழைக்கப்படும் ஆயுதக் குழு இவரது இறப்புக்குப் பொறுப்பெடுத்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இவரது கணவர் வெ. யோகேசுவரனை 1987 ஆம் ஆண்டில் கொழும்பில் வைத்து சுட்டுக் கொன்றனர்.[1]
மேற்கோள்கள்
- ↑ டி. பி. எஸ். ஜெயராஜ் (16 மார்ச் 2008). "Assassinating Tamil Parliamentarians: The unceasing waves". த நேசன் இம் மூலத்தில் இருந்து 2014-02-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140220083850/http://www.nation.lk/2008/03/16/newsfe1.htm.