சப் ஜான்
சப் ஜான் | |
---|---|
பிறப்பு | ஜான் எடட்டட்டில்[1] |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1989 – தற்போது வரை |
சப் ஜான் (Sab John) என்பவர் ஒரு இந்திய திரைக்கதை எழுத்தாளர் மற்றும் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பணியாற்றும் நடிகர் ஆவார். இவர் சாணக்யன் (1989) மற்றும் குணா (1991) ஆகிய படங்களில் பணியாற்றியதற்காக அறியப்பட்டவர்.
தொழில்
சப் ஜான் பரபரப்பூட்டும் திரைப்படமான சாணக்கியன் (1989) படத்தின் வழியாக எழுத்தாளராக அறிமுகமானார். அப்படமானது அப்போது தொழில்நுட்பத்தில் மேம்பட்டது என கருதப்பட்டது.[2][3] படத்தின் கதை 18 நாட்களில் உருவாக்கப்பட்டது. இவர் படத்தை 450 பக்கங்களில் இயக்குனர் டி. கே. இராஜீவ் குமாருடன் எழுதினார்.[4] அடுத்த ஆண்டு குணா என்ற காதல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.[1][5] வியூகம் (1990), காந்தாரி (1992) உள்ளிட்ட பல மலையாள படங்களுக்கு திரைக்கதை எழுதிய பின்னர். சில்லுனு ஒரு காதல் (2006) படத்தின் வழியாக தமிழ் திரையுலகத்துக்கு மீண்டும் வந்தார்.
திரைப்படவியல்
எழுத்தாளராக
- சாணக்கியன் (1989)
- க்ஷானக்கட்டு (1990)
- வியூகம் (1990)
- குணா (1991)
- சூர்யா மானசம் (1991)
- காந்தாரி (1992)
- பரனகூடம் (1994)
- காந்தீவம் (1994)
- ஐவே (1995)
- மயில்பீலிக்காவு (1998)
- பிரியாம் (2000)
- சில்லுனு ஓரு காதல் (2006)
- சிவப்பு மழை (2010)
நடிகராக
- குருதிப்புனல் (1995)
- சத்தியமேவ ஜெயதே (2000)
குறிப்புகள்
- ↑ 1.0 1.1 "Get the story right". தி இந்து. 31 October 2016. பார்க்கப்பட்ட நாள் 2020-08-02.
- ↑ "18 ദിവസം കൊണ്ട് 450 പേജുള്ള 'ചാണക്യന്റെ' തിരക്കഥ; നിഗൂഢതകളുടെ 'മയിൽപ്പീലിക്കാവ്': സാബ്ജോൺ പറയുന്നു". Manorama Online (in മലയാളം). பார்க்கப்பட்ட நாள் 2020-08-02.
- ↑ "Writer of Kamal Haasan's Chanakyan emerges from obscurity with online screenplay class". OnManorama. Archived from the original on 2020-07-11. பார்க்கப்பட்ட நாள் 2020-08-02.
- ↑ Sidhardhan, Sanjith (20 February 2020). "'A man in the bar told our hero that he looked like Kamal Haasan and should try acting'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 23 July 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-08-02.
- ↑ "Sab John, Who Wrote Kamal Haasan-Starrer Guna, On The Five Basic Elements Of Screenwriting". Film Companion. 20 May 2020. Archived from the original on 27 July 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-08-02.