சந்திரஹாசன்
சந்திரஹாசன் | |
---|---|
படிமம்:Chandrahasan.jpg | |
பிறப்பு | 6 மார்ச்சு 1936 பரமக்குடி, தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | 18 மார்ச்சு 2017 | (அகவை 81)
பணி | திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1981–2017 |
வாழ்க்கைத் துணை | கீதாமணி (திருமணம் 1965-2017) |
பிள்ளைகள் | நிர்மல் ஹாசன் அனு ஹாசன் |
சந்திரஹாசன் (Chandrahasan; 6 மார்ச் 1936 - 18 மார்ச் 2017) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இந்திய திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகரும் ஆவார்.
தொழில்
சந்திரஹாசன்,ழக்கறிஞர் சீனிவாசன் - இராஜலட்சுமி தம்பதியினருக்கு நான்கு குழந்தைகளில் இரண்டாவது குழந்தையாக பிறந்தார். இவரது மூத்த சகோதரர் சாருஹாசன் , இளைய சகோதரர் கமல்ஹாசன் ஆகியோர் திரைப்படத் துறையில் நடிகர்களாக பணியாற்றி வருகின்றனர். அதே நேரத்தில் இவரது தங்கை நளினி ரகுராம் ஒரு பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார்.[1] ஒரு இளைஞனாக, சாருஹாசன் வழக்கறிஞர் பணியைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு பாடகராகப் பயிற்சி செய்தார். சாருஹாசனுக்கு மாறாக, ஒரு நடிகராக தனது வெற்றிகரமான வாழ்க்கை முழுவதும் சந்திரஹாசன் தனது இளைய சகோதரர் கமல்ஹாசனுடன் மிக நெருக்கமான உறவைப் பேணி வந்தார்.[2]
1995 இல், இவர் தனது சகோதரர் சாருஹாசனின் மகள் சுஹாசினி மணிரத்னம் இயக்கிய இந்திரா என்ற படத்தில் நடிகராகத் தோன்றினார். இந்தப் படத்தில் அரவிந்த் சுவாமி , நாசருடன் இவரது சொந்த மகள் அனு ஹாசன் 'இந்திரா' வேடத்தில் நடித்திருந்தார்.[3] 2000களின் போது, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிர்வாகத்தில் சந்திரஹாசன் மிகவும் சுறுசுறுப்பான பங்கு வகித்தார்.[4][5] விஸ்வரூபம் (2013) பட வெளியீட்டின் போது எதிர்கொண்ட பிரச்சனைகளின் போது, எதிர்க்கட்சிகளுடன் மத்தியஸ்தம் செய்வதில் சாருஹாசன் முக்கிய பங்கு வகித்தார்.[6][7]
சந்திரஹாசன் இறப்பதற்கு முன், அறிமுக இயக்குனர் இசுடீபன் ரங்கராஜ் இயக்கத்தில் அப்பத்தாவ ஆட்டய போட்டுடாங்க என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து முடித்தார். இரண்டு வயதான நபர்களுக்கிடையேயான ஏற்படும் காதல் பற்றிய கதை, ஸ்டீபன் சந்திரஹாசனை "மரியாதைக்குரிய நபர்" என்று அறியப்பட்ட ஒருவரை விரும்புவதாகவும், காதல் தவறான வெளிச்சத்தில் தெரிவிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் நடித்தார். நடிகர் விக்ராந்தின் தாயான ஷீலாவுடன் இவர் நடித்த இந்த படம் 2017 இல் நிறைவடைந்தது. ஆனால் 2021 இல் Sony Liv இல் நேரடியாக வெளியிடப்பட்டது
சொந்த வாழ்க்கை
சந்திரஹாசன், கீதாமணி என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்கு நிர்மல்ஹாசன் என்ற மகன் உள்ளார். அவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவரது மகள் அனு ஹாசன், இந்திய மற்றும் பிரித்தானிய தயாரிப்புகளில் நடிகையாக தோன்றியுள்ளார்.[8]
இறப்பு
கீதாமணி ஜனவரி 2017 இல் தனது 73 வது வயதில் இறந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து, சந்திரஹாசன் மார்ச் 2017 இல் 81 வயதில் இறந்தார்.
சான்றுகள்
- ↑ "The Sunday Tribune — Books". www.tribuneindia.com.
- ↑ "Movies: Kamal, as we know him". Rediff.com. 8 November 2000.
- ↑ "Suhasini Mani Ratnam new film Indira zooms in on caste wars". https://www.indiatoday.in/magazine/eyecatchers/story/19950531-suhasini-mani-ratnam-new-film-indira-zooms-in-on-caste-wars-807343-1995-05-31.
- ↑ "rediff.com: Kamal Haasan's Virumaandi, finally!". specials.rediff.com.
- ↑ "Kamal Haasan’s brother and producer Chandrahasan dead". http://indianexpress.com/article/entertainment/tamil/kamal-haasan-brother-and-producer-chandrahasan-dies-in-london-4575812/.
- ↑ "'I'd like to live the way my brother Chandrahasan did'". Rediff.com.
- ↑ "Parties to Vishwaroopam row willing to thrash out issues". http://www.thehindu.com/news/cities/chennai/parties-to-vishwaroopam-row-willing-to-thrash-out-issues/article4366216.ece.
- ↑ Mahesh, Chitra (6 April 2001). "The focus is on women". தி இந்து. http://www.thehindu.com/2001/04/06/stories/1306069f.htm.[தொடர்பிழந்த இணைப்பு]