சத்தி நிபாத அகவல்
சத்தி நிபாத அகவல் என்னும் நூல் தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன கு௫ முதல்வர் சத்திய ஞானியின் ஞானாசிரியன் காவை அம்பலவாணத் தம்பிரான் என்பரால் 14ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. ‘சத்தி நிபாதம்’ என்னும் தொடருக்குத் ‘திருவருள் பதிதல்’ என்பது பொருள். ஆன்மாவில் திருவருள் பதியவேண்டும் என விரும்புவர். இதற்கு என்ன செய்யவேண்டும் எனக் கூறுவது இந்த நூல்.
சிவப்பிரகாசம் என்னும் நூல் சத்தி நிபாத நிலைகள் நான்கினைக் கூறுகிறது. பின்னர் சிவப்பிரகாசம் நூலின் ஆசிரியரான உமாபதியாரின் மாணாக்கர் அம்பலவாணத் தம்பிரான் தலைப்பில் காணும் அகவல் நூலைச் செய்தார். சத்தி நிபாத அகவல் நூலின் காலத்துக்குப் பின்னர் வாழ்ந்த சம்பந்த முனிவர் இயற்றிய சிவானந்தமாலை என்னும் நூல் இந்த அகவல் நூலைப் பற்றிக் கூறுகிது.
இந்த அகவல் நூல் ஆசிரியப்பாவால் அமைந்த்து. 76 அடிகள் கொண்டது. இந்த நூல் இரு பிரிவாக அமைந்துள்ளது. முதல் பிரிவு திருவருள் ஆன்மாவில் பதிய என்ன செய்யவேண்டும் எனக் கூறுகிறது. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு வழிகளைப் பின்பற்றி ஆன்மாவில் திருவருளைப் பதியவைத்துக்கொள்ளலாம் என இப்பகுதி விளக்குகிறது. இரண்டாம் பகுதி முத்தி நம்மை வந்தடையும் முறைமையை எடுத்துரைக்கிறது. திருவருள்தான் முத்தி. இந் நூலாசிரியர் சிவானந்தமாலை செய்தவரின் மாணாக்கர் ஆதலால் அந்த நூலின் கருத்துக்களையே வழிமொழிகிறார்.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, 2005.