சதுர அடி 3500

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சதுர அடி 3500
இயக்கம்ஜெய்சன் பழயாட்டு
தயாரிப்புஎன்ஆர்எம்
ஜெய்சன் பழயாட்டு
திரைக்கதைஆர். ராதாகிருஷ்ணன்
இசைகணேஷ் ராகவேந்திரா
நடிப்புநிக்கில் மோகன்
இனியா (நடிகை)
பெலிக்ஸ் ஜானி குருவில்லா
ரகுமான்
சுவாதி தீட்சித்
பிரதாப் போத்தன்
ஒளிப்பதிவுஆனந்தகுட்டன்
ஐ. பிரான்சிஸ்
படத்தொகுப்புஆர். ஜி. ஆனந்த்
கலையகம்ரைட் வியூ சினிமாஸ்
ஆர்பிஎம் சினிமாஸ்
வெளியீடு4 ஆகத்து 2017 (2017-08-04)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சதுர அடி 3500 (Sathura Adi 3500) என்பது 2017ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திகில் நாடகத் திரைப்படம் ஆகும். ஜெய்சன் பழயாட்டு எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு, ஆர். ராதாகிருஷ்ணன் திரைக்கதை எழுதியுள்ளார். இப்படத்தில் நிகில் மோகன், இனியா, சுவாதி தீட்சித், பெலிக்ஸ் ஜானி குருவில்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் மூத்த நடிகர்களான ரகுமான், பிரதாப் போத்தன், கோவை சரளா ஆகியோர் பிற வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் தயாரிப்புப் பணிகள் 2016 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கியது. எதிர்மறையான விமர்சனங்களுடன் 2017 ஆகத்து 4 அன்று வெளியானது.[1][2]

நடிகர்கள்

தயாரிப்பு

ஜெய்சன் பழயாட்டு சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தால் ஈர்க்கப்பட்டு, பின்னர் திரைக்கதையை எழுதினார். அங்கு மக்கள் அமானுஷ்ய சக்தி இருப்பதை அனுபவித்ததாகக் கூறப்படுகிறது. இனியா முக்கிய பெண் வேடத்தில் நடித்தார். ஜெய்சனின் பழயாட்டுவிடன் கதையைக் கேட்டு படத்தில் பணியாற்ற ரகுமான் ஒப்புக்கொண்டார்.[3] முன்னதாக ராம் கோபால் வர்மாவின் திகில் படமான ஐஸ்கிரீம் (2014) படத்தில் தோன்றிய மலையாள நடிகர் நிகில் மோகன், கன்னட நடிகர் ஆகாஷ் மற்றும் சுவாதி தீக்ஷித் ஆகியோரும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாயினர்.[4] இந்த படம் ஒளிப்பதிவாளர் ஆனந்தகுட்டனின் இறுதி கால படங்களில் ஒன்றாகும், அவர் இறந்த பிறகு ஐ. பிரான்சிஸ் அவருக்குபதிலாக ஒளிப்பதிவை மேற்கொண்டார். சதுர அடி 3500 படமானது 2016 இன் பிற்பகுதியில் பெங்களூரு, சாலகுடி, கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் சென்னையின் பிற உள் பகுதிகளில் படமாக்கப்பட்டது.[5][6]

ரகுமான் நடித்த துருவங்கள் பதினாறு (2016) படத்தின் வெற்றியானது, இப்படத்தில் அவரது பெயரைக் கொண்டு விளம்பரம் செய்து வணிக ரீதியாக அறுவடை செய்ய தூண்டுதலாக ஆனது. பின்னர் பிப்ரவரி 2017 இல் பகடி ஆட்டம் மற்றும் மார்ச் 2017 இல் ஒரு முகத்திரை படங்கள் வெளியான பிறகு, சதுர அடி 000 படத்தின் தயாரிப்பாளர்கள் ரகுமான் இப்படத்தில் சிறிய பாத்திரத்தில் நடித்துள்ளதுக்கு மாறாக அவரை படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ஒருவர் போல விளம்பரப்படுத்தினர்.[7] ஜூலை 2017 இல் படத்தின் இசை வெளியீட்டின் போது, நடிகை இனியா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் தவறியதாக மூத்த இயக்குனர் கே. பாக்யராஜ் விமர்சித்தார். மேலும் தயாரிப்பாளர்கள் அவரை படங்களில் ஒப்பந்தம் செய்வதற்கு முன் இன்னொரு முறை சிந்திக்க வேண்டும் என்று கூறினார். பின்னர் பாக்யராஜின் கருத்துக்கள் குறித்து, கருத்து தெரிவித்த இனியா தான் கணுக்காலில் காயமுற்று அதிலிருந்து மீண்டு வருவதாகக் கூறினார். மேலும் தன்னை அந்த விழாவுக்கு முறையாக அழைக்காமல் குழுவில் தனக்கு வாட்சப் செய்தி அனுப்பப்பட்டதாகவும் தெரவித்தார்.[8][9]

இசை

இப்படத்திற்கான இசையை கணேஷ் ராகவேந்திரா அமைத்தார். படத்தின் பாடல் வெளியீட்டு உரிமையை டைம்ஸ் மியூசிக் இந்தியா வாங்கியது. இந்த படப் பாடல்கள் 25 சூலை 2017 அன்று வெளியிடப்பட்டது. படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றன.

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "விண்மேலே"  நரேஷ் ஐயர் 4:40
2. "தம்பூரா"  ரீட்டா 4:08
3. "தொட்டுட்டு தொட்டுட்டு"  ஹரிசரண் 4:25
4. "தேடிப் போகும்"  சத்தியன் மகாலிங்கம் 3:26

வெளியீடு

இந்தப் படம் 4 ஆகத்து 2017 அன்று கலவையான விமர்சனங்களுடன் வெளியானது.[7][10]

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சதுர_அடி_3500&oldid=33033" இருந்து மீள்விக்கப்பட்டது