பகடி ஆட்டம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பகடி ஆட்டம் (Pagadi Aattam) (ஆங்கிலம்: Chess Game) என்பது 2017 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனை ராம் கே சந்திரன் என்பவர் இயக்கினார். ரகுமான் (நடிகர்), சுரேந்தர், அகில் (நடிகர்) மோனிகா, கௌரி நந்தா ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரங்களில் நடித்துள்ளனர். பாடல்கள் மற்றும் பின்னணி இசையமைத்தவர் கார்த்திக் ராஜா ஆவார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2016 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் துவங்கியது. இந்தத் திரைப்படம் பெப்ரவரி 17, 2017 இல் வெளியானது[1]

கதைச் சுருக்கம்

சூர்யா என்பவன் ஒரு செல்வந்தன். அவன் பணத்தை ஊதாரித் தனமாக பெண்களுக்கு செலவு செய்பவன்.அதனால் இவனுக்கு பல பெண்களின் தொடர்பு கிடைத்தது. இவனுடைய பெண் தோழிகளின் பெயரினைத் தனது செல்லிடத் தொலைபேசியில் நூடுல்ஸ், எலுமிச்சை, காப்பி மற்றும் பிற பெயர்களில் பதிவு செய்துவைத்திருப்பான். தனது பெண் தோழியைச் சந்திக்கப் போகும் போது கடத்தப்படுகிறார். கண்விழித்துப் பார்க்கும் போது ஒரு மூடிய பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அநத்ப் பெட்டிக்குள் ஒரு செல்லிடத் தொலைபேசி உள்ளது. அவனைக் கடத்தியவர்களிடம் தன்னை விடுவிக்கும் படிக் கேட்கிறான். ஆனால் கடத்தல்காரர்கள் அவனுடைய ஆண் இனப்பெருக்க உறுப்பினை ஒருமணி நேரத்திற்குள் அவனை வெட்டச் சொல்கிறார்கள்

பின் கடத்தல்காரன் ஒருமனி நேரத்திற்குப் பின் செல்லிடத் தொலைபேசியில் அழைத்து கூறியதை செய்தாயா எனக் கேட்கிறான். ஆனால் சூர்யா தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறான். பின் கடத்தல்காரன் , அவன் பெண்களுக்குச் செய்த பாவங்களை நினைவு கூறச் சொல்கிறார். பிறகு சூர்யா, கவுசல்யா எனும் வறுமை நிலையிலுள்ள பெண்ணை காதல் எனும் பெயரில் ஏமாற்றியதாகவும் அவளுடன் இருந்ததை நிகழ்படம் எடுத்ததனால் அவர் தற்கொலை செய்ததையும் நினைவு கூர்ந்தார்.

அந்த வேளையில் இந்த கடத்தல் வழக்கை விசாரணை செய்ய தேவேந்திர குமார் எனும் அதிகாரி நியமனம் செய்யப்படுகிறார். தொழிநுட்பத்தின் உதவியினாலும் இவருடைய திறமையாலும் சூர்யாவிற்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததையும் கவுசல்யாவின் இறப்பு பற்றியும் அறிகிறார். மேலும் அவனைக் கடத்தியது கவுசல்யாவின் சகோதரி தான் என்பதனையும் கண்டுபிடிக்கிறார். ஆனால் காவல் அதிகாரியும் சூர்யா உயிர் வாழத் தகுதி இல்லாதவன் என்று கூறுகிறார். இறுதியில் நிலத்தின் ஆழத்தில் சூர்யா பெட்டியில் வைத்து புதைக்கப்படுகிறார்.

தயாரிப்பு

மகேந்திரனிடம் உதவிய இயக்குநராக இருந்த சந்திரன் இந்தத் திரைப்படத்தை இயக்கியுள்ளார். அவர் தகவல் தொழில்நுட்பத்தினை தவறாகப் பயன்படுத்தப் படுவதை மையமாக வைத்து இந்தக் கதையை உருவாக்கியுள்ளார்.[2] அக்டோபர் , 2015 இல் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தன. ரகுமான் (நடிகர்) இதில் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார்.[3]

ரகுமான் காவல் அதிகாரி கதாப்பத்திரத்தில் நடித்து வெற்றி பெற்ற துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2017 இல் இந்தத் திரைப்படத்தை வெளியிடத் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டனர்.

வெளியீடு

பெப்ரவரி 17, 2017 இல் வெளியான இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுத் தந்தது. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழானது பகடி ஆட்டம் திரைப்படமானது ஹாலிவுட் திரைப்படமான பியூரிட் திரைப்படத்தின் தழுவல் எனக் கூறியது.[4] தி டெக்கன் குரோனிக்கள் இந்தத் திரைப்படத்தை ஒருமுறை பார்க்கலாம் எனக் கூறியது.[5] இன்டியா கிளிட்ஸ்.காம் எதிர்மறையான விமர்சனத்தைத் தந்தது.[6]

சான்றுகள்

  1. "வெள்ளிக்கிழமை வெளியாகும் திரைப்படங்கள்". சிஃபி.காம். Archived from the original on 2017-02-17. பார்க்கப்பட்ட நாள் 22 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Rahman dons khaki". Deccan Chronicle. 2 March 2016. பார்க்கப்பட்ட நாள் 22 February 2017.
  3. Vijayan, Naveena. "Rahman ready to experiment". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 22 February 2017.
  4. "Pagadi Aattam Movie Review, Trailer, & Show timings at Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 22 February 2017.
  5. "Pagadi Aattam movie review: A one time watch for Rahman's cop act". Deccan Chronicle. 18 February 2017. பார்க்கப்பட்ட நாள் 22 February 2017.
  6. "Pagadi Aattam review. Pagadi Aattam Tamil movie review, story, rating". indiaglitz.com. பார்க்கப்பட்ட நாள் 22 February 2017.

வெளியிணைப்புகள்

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் பகடி ஆட்டம்

"https://tamilar.wiki/index.php?title=பகடி_ஆட்டம்&oldid=35057" இருந்து மீள்விக்கப்பட்டது