சதுரங்கா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சதுரங்கா
பிறப்புசுப்பிரமணியராஜா அரசு
1916 (1916)
இறப்பு19 அக்டோபர் 1998 (அகவை 81–82)[1]
மைசூர், இந்தியா

சதுரங்கா (Chaduranga; கன்னடம்: ಚದುರಂಗ) என்ற புனைப்பெயரால் அறியப்பட்ட சுப்பிரமணியராஜா அரசு (1916 – 19 அக்டோபர் 1998) கன்னட மொழியில் எழுதிய ஓர் இந்திய எழுத்தாளராவார். இவர் சர்வமங்கலா, உய்யாலே, வைஷாகா, மற்றும் ஹெஜ்ஜாலா ஆகிய நான்கு புதினங்களையும் , சில சிறுகதைகளையும் எழுதினார். சதுரங்கா 1968ஆம் ஆண்டில் தனது "சர்வமங்கலா" கதையை தழுவி ஒரு திரைப்பதிப்பை இயக்கிருந்தார். அதே நேரத்தில் 1969ஆம் ஆண்டில் "உய்யாலே" அதே பெயரில் ஒரு திரைப்படமாக உருவாக்கப்பட்டது. [2]

விருதுகள்

சதுரங்காவுக்கு 1982ஆம் ஆண்டில் மாநில சாகித்திய அகாதமி விருதும்,[3] கர்நாடக மாநில இராஜ்யோத்சவ விருதும், இவரது 'வைசாகா' நூலுக்கு மத்திய சாகித்ய அகாடமி விருதும் 1993இல் மைசூர் பல்கலைக்கழகத்தால்[4] கௌரவ மருத்துவர் பட்டமும் வழங்கப்பட்டது. மண்டியாவில் நடைபெற்ற 7வது அகில இந்திய கன்னட இலக்கிய மாநாட்டின் தலைவராகவும் இருந்தார்.

இறப்பு

சதுரங்கா, 1998 அக்டோபர் 19 அன்று தனது எண்பத்திரண்டு வயதில் மைசூரில் காலமானார்.[5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சதுரங்கா&oldid=19079" இருந்து மீள்விக்கப்பட்டது