சண்டமாருதம்
சண்டமாருதம் | |
---|---|
இயக்கம் | எ. வெங்கடேஷ் |
தயாரிப்பு | ஆர். சரத்குமார் ராதிகா லிஸ்டின் ஸ்டீபன் |
கதை | ராஜேஷ்குமார் |
இசை | ஜேம்ஸ் வசந்தன் |
நடிப்பு | ஆர். சரத்குமார் ஓவியா மீரா நந்தன் |
ஒளிப்பதிவு | என்.எஸ்.உதயகுமார் |
படத்தொகுப்பு | வி. டி. விஜயன் |
கலையகம் | மேஜிக் பிரேம்ஸ் |
வெளியீடு | 20 பிப்ரவரி 2015 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சண்டமாருதம் (Sandamarutham) என்பது 2015 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.இது அதிரடி திரைப்படம் வகையைச் சார்ந்ததாகும். 2014 ஆம் ஆண்டு மே மாதத்தில் படத்திற்கான பூசை போடப்பட்டு படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது[1]. 2015 ஆம் ஆண்டு எஸ். வெங்கடேஷ் அவர்கள் இயக்கியத்தில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சண்டமாருதம். சண்டை காட்சிகள் மற்றும் திகில் (அல்லது) சுவாரசியம் நிறைந்த படமாக அமைந்தது மேலும் இப்படத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
படத்தின் நாடிகர்கள்
- ஆர். சரத்குமார் என்ற சூர்யா(வேடம் 1) சர்வேஸ்வரன்(வேடம் 2)
- மினிமி / ரேகா என்ற ஓவியா
- மகா என்ற மீரா நந்தன்
- ரங்கராஜன் என்ற ராதா ரவி
- திருமலை என்ற சமுத்திரக்கனி
- தில்லி கணேஷ் (சூர்யாவின் தந்தை)
- நளினி (சூர்யாவின் அம்மா)
- சுப்பிரமணியாக என்ற மோகன் ராமன் (மகா வின் தந்தை)
- புன்னையோடி என்ற வெண்ணிறாடை மூர்த்தி
- நிரகுலதன் என்ற தம்பி ராமையா
- குப்பன் என்ற ஜார்ஜ் மரியன்
- தன்டபானி
- பாஸ்கர் என்ற கராத்தே ராஜா
- தாமரை சந்திரன் என்ற வின்சென்ட் அசோகன்
- முருகன் என்ற இம்மான் அண்ணாச்சி
- மயிலு என்ற சிங்கம்புலி
- டி.ஜி.பி என நாரேஷ்
- நீதிபதியாக சந்தான பாரதி
- அவினாஸ்
- ஜி. எம். குமார்
- ரேகா சுரேஷ் (மகாவின் அம்மா)
- எம்.என்.கே. நடேசன்
- அம்மு அப்சரா (திருமலையின் மனைவி)
- செல்வம் என்ற அருன் சாகர்
- பிரகாஷ் என்ற ராம்குமார்
- ஆதவன்
- நமசிவாயம் என்ற பாபுஸ்
- கானா உலகநாதன்
- கண்ணன்
- மன்னரா (சிறப்பு தோற்றம்).
தயாரிப்பு
இந்த படத்தின் படப்பிடிப்பு 14 மே 2014 அன்று தொடங்கியது.[2] படத்தின் முன்னணி நடிகையாக லட்சுமி ராய் இருப்பதாக சில அறிக்கைகள் முதலில் தெரிவித்தனர் பின்பு (2013)இல் வெளியான நான் ராஜாவாக போகிறேன்[3][4] என்ற திரைப்படத்தில் நடித்து வந்த மலையாள நடிகை சரயு மற்றும் அவானி மோடியை இறுதியாக படக்குழுவினர் தெர்வுசெய்தனர்.[5] இருவரும் நடிகைகளாக இருந்தனர் ஆனால் பின்னர் ஓவிய மற்றும் மீரா நந்தன் ஆகியோர் மாற்றப்பட்டனர். கன்னட நடிகர் அருண் சாகர் இந்தப் படத்தில் எதிர்மறையான கதாபாத்திரங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் மேலும் இந்தப் படத்தின் மூலமாக அருண் சாகர் தமிழில் அறிமுகமானார்.[6]
ஒலிப்பதிவாளர் குழு
படத்தின் ஒலிப்பதிவு [[ஜேம்ஸ் வசந்தன்|ஜேம்ஸ் வசந்தனால் இயற்றப்பட்டது. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை 14 டிச 2014 அன்று நடைபெற்றது. நமிதா, தனுஷ், விக்ரம் பிரபு, விமல், கே.எஸ்.ரவிகுமார், ராதா ரவி, விஜயகுமார், ஏ வெங்கடேஷ், அபிராமி ராமநாதன், எ.எல் அழகப்பன், ஜி சிவா, மதன் கர்கி, ஸ்ரீபிரியா, லிசி பிரியதர்ஷன், சாந்தான பாரதி, மெயில்சாமி, ஜேம்ஸ் வசந்தன், எ.எல் விஜய், நிரோவ் ஷா, கலிபுலி எஸ் தனு, மோகன் ராமன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ஆர்.கே. செல்வமணி, பாரத், வி. சேகர், கே. ராஜன், ஆர்.பீ. சௌதிரி, ராம்கி, நிரோஷா, பாபி சிம்ஹா, மனோபாலா, லிஸ்டின் ஸ்டீபன், சுசீந்திரன், மோகன், நரேன் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தின் இசை வெளியீடு நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.[7]
இசையமைப்பாளர்கள்
- பார்த்துக் கொண்டே என்ற பாடலுக்கு சத்தியபிரகாஷ் மற்றும் சைந்தவி
- டும்மாங்கோலி என்ற பாடலுக்கு கானா உலகநாதன் மற்றும் எ.வி. பூஜா
- சண்டமாருதம் என்ற பாடலுக்கு ஜேம்ஸ் வசந்தன் மற்றும் ஜிதின் ராஜ்
- உன்னை மட்டும் என்ற பாடலுக்கு சரத்குமார் மற்றும் பிரேம்ஜி.
வெளியீட்டு உரிமம்
படத்தின் செயற்கைக்கோள் உரிமைகள் சன் தொலைக்காட்சியில் விற்கப்பட்டன.
மேற்கோள்கள்
- ↑ Sanda Marudham - a quickie from Sarath Kumar!
- ↑ Sanda Marudham - a quickie from Sarath Kumar!
- ↑ "Lakshmi Rai out, two young girls for Sarath!". Archived from the original on 2014-05-16. பார்க்கப்பட்ட நாள் 2019-03-29.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Lakshmi out of Sandamarutham - Bangalore Mirror
- ↑ "Lakshmi Rai out, two young girls for Sarath!". sify.com. Archived from the original on 2014-07-17. பார்க்கப்பட்ட நாள் 2014-07-20.
- ↑ http://www.newindianexpress.com/entertainment/reviews/Sarathkumar-Introduces-Arun-Sagar-to-Kollywood/2014/05/21/article2231968.ece1
- ↑ "Sandamarutham Audio Launch Stills". Archived from the original on 2019-03-29. பார்க்கப்பட்ட நாள் 2019-03-29.